சரியான இறக்குமதி உரிமமின்றி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட RM11 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 40 சொகுசு வாகனங்கள் சுங்கத் துறையினரால் பறிமுதல்

கிள்ளான், ஆகஸ்ட் 29 :

செல்லுபடியாகும் இறக்குமதி உரிமமின்றி நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட RM11 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள 41 ஆடம்பர வாகனங்கள் மற்றும் 9 அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்களை சுங்கத் துறை பறிமுதல் செய்துள்ளது.

ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 30 வரை நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து வாகனங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத் துறையின் மத்திய மண்டல துணை இயக்குநர் முகமட் சப்ரி சாத் தெரிவித்தார்.

“சரியான இறக்குமதி ஆவணங்கள் இல்லாமல் நாட்டிற்குள் கொண்டு வரப்படும் வாகனங்களைக் கண்டறிய Ops Bearing எனும் நடவடிக்கையை நடத்தினோம்.

அவ்வாறு “பிடிபட்ட வாகனங்களில் ஃபோர்டு ஜிடி 40, கிளாசிக் ஃபோர்டு மஸ்டாங், மஸ்டா ஆர்எக்ஸ்7, வோக்ஸ்வாகன் கோம்பி, மினி கூப்பர் கிளப்மேன், தோயோத்தா ஹாரியர் மற்றும் தோயோத்தா வெல்ஃபயர் ஆகியவை அடங்கும்” என்று அவர் இன்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 29) பூலாவ் இண்டாவில் உள்ள விஸ்மா கஸ்டமில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

மேலும் ஹார்லி டேவிட்சன், ஹோண்டா சிபி1100 மற்றும் கேடிஎம் அட்வென்ச்சர் 1290 உள்ளிட்ட ஒன்பது அதிசக்திவாய்ந்த மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டதாக முகமட் சப்ரி கூறினார்.

ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து வாகனங்கள் வரவழைக்கப்பட்டதாக அவர் கூறினார்.

“எங்கள் விசாரணைகளின் அடிப்படையில், இந்த வாகனங்களில் சில மாணவர்களால் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன.

“வாகனங்களை உள்ளே கொண்டு வருவதற்கு முன்பு அவர்களிடம் அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை வைத்திருக்க வேண்டும் என்பதை அவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள்,” என்று அவர் கூறினார்.

பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு குறைந்தபட்சம் RM4.24 முதல் RM7.12 மில்லியன் வரையான வரி செலுத்தப்படவில்லை என்று அவர் கூறினார்.

“தடைசெய்யப்பட்ட பொருட்களை இறக்குமதி செய்ய முயற்சித்ததற்காக சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 இன் கீழ் நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம்.

“கடத்தல் நடவடிக்கைகள் குறித்த தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக முன்வருமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

“எங்கள் தகவல் தெரிவிப்பவர்களின் அடையாளங்கள் கண்டிப்பாக இரகசியமாக வைக்கப்படும்,” என்று அவர் கூறினார், அத்தோடு தகவல் தெரிந்தவர்கள் 1800 88 8855 என்ற சுங்க துறையின் கட்டணமில்லா ஹாட்லைனைத் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here