தைப்பிங்கில் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெள்ளம்

தைப்பிங், ஆகஸ்ட் 29 :

நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து, இங்கு திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது, இது 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான வெள்ளம் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

தாமான் ஶ்ரீ கோத்தா ஃபஸா துவா, கம்போங் செம்படான், கம்போங் ஆயிர் கூனிங் மற்றும் தாமான் கூனிங் சாரி ஆகிய இடங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தாமான் ஶ்ரீ கோத்தா ஃபஸா துவாவைச் சேர்ந்த இல்லத்தரசி நூர் லலிலா யாங் யஹாயா, 79, மற்றும் அவரது கணவர் முகமட் ஷையுதீன் அஹ்மட், 83, ஆகியோர் கூறுகையில், மாலை 6 மணியளவில் ஏற்பட்ட வெள்ளத்தில் இருந்து தங்களாஅல் வெளியேற முடிந்தது என்று கூறினார்.

“எனது வீட்டில் வெள்ள நீர் இடுப்பு மட்டத்தை எட்டியிருப்பதைக் கண்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கடந்த 15 ஆண்டுகளில் இது இரண்டாவது முறையாக வெள்ளத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

“புதிதாக வாங்கிய பொருட்கள் மற்றும் சில மின்சாதனங்கள் உட்பட மரச்சாமான்கள் அனைத்தும் வெள்ளத்தில் அழிக்கப்பட்டன. கண்ணாடியிலான கதவு வெள்ளத்தால் உடைக்கப்பட்டது, ”என்று அவர் இன்று கூறினார்.

43 ஆண்டுகளாக அங்கு வசிக்கும் நூர் லலிலா கூறுகையில், எங்கள் வீடு ஆற்றின் அருகே அமைந்திருப்பதால் வெள்ளத்தால் அது பாதிக்கப்படுவதாகக் கூறினார், ஆனால் பொதுவாக வீட்டு வளாகத்திற்குள் மட்டுமே தண்ணீர் நுழையும் என்றார்.

இன்னொரு குடியிருப்பாளரான கோலாலம்பூரைச் சேர்ந்த ஒருவர், தனது மூன்று குழந்தைகளுடன் ஶ்ரீ இஸ்கந்தர் வீட்டைச் சுத்தம் செய்வதற்கும் சேதமடைந்த பொருட்களை அகற்றுவதற்கும் இன்று அதிகாலையில் தான் தைப்பிங் வந்ததாக அவர் கூறினார்.

மற்றொரு குடியிருப்பாளரான ஷாஹ்ரிமி ஷருடின், 43, கூறுகையில், வெள்ளம் ஏற்பட்டபோது, ​​அவரும் அவரது மனைவியும் அவர்களது நான்கு குழந்தைகளும் திரெங்கானுவில் விடுமுறைக்கு சென்றிருந்ததாகக் கூறினார்.

“அண்டை வீட்டாரிடமிருந்து வெள்ளம் தொடர்பான அழைப்பைப் பெற்று, நேற்று எனது கைபேசியில் கண்காணிப்பு கேமராவில் வெள்ளத்தைப் பார்த்ததும், நான் உடனடியாகத் திரும்பிச் சென்றேன். வீட்டில் மோசமாக சேதமடைந்த மரச்சாமான்கள் மற்றும் மின்சாதன பொருட்களை தூக்கி எறிந்தேன். இரண்டு கார்கள் – புரோத்தான் எக்ஸோரா மற்றும் பெரோடுவா அல்சா ஆகியவையும் நீரில் மூழ்கின,” என்று இரண்டு ஆண்டுகளாக அங்கு வசிக்கும் ஷாஹ்ரிமி கூறினார்.

இன்று நண்பகல் நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 55 பேர் சாங்கட் ஜெரிங்கில் உள்ள டேவான் ஒராங் ராமாய் ஆயிர் கூனிங் மற்றும் ட்ரோங்கில் உள்ள டேவான் ஒராங் ராமாய் சுங்கை பாரு ஆகிய இரண்டு நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here