சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கன ரக வாகனம் மீது கார் மோதியதில் ஜகதீஷ் குமார் உயிரிழந்தார்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட் 30 :

இன்று அதிகாலை, ஜலான் செனாங்கின் 6, தாமான் பாசீர் பூத்தே, பாசீர் கூடாங் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கன ரக வாகனம் மீது, மிட்சுபிஷி டிரைட்டன் கார் மோதியதில் அதன் ஓட்டுநர் ஜகதீஷ் குமார் ராமசி (20) என்பவர் உயிரிழந்தார்.

பாசீர் கூடாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் செயல்பாட்டுத் தளபதி, நூர் அஷான் அஹ்மட் கூறுகையில், ஜோகூர் மாநில செயல்பாட்டு மையத்திற்கு இன்று அதிகாலை 4.01 மணிக்கு சம்பவம் தொடர்பாக அவசர அழைப்பு வந்தது.

“உடனே எட்டு உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். நாங்கள் பாதிக்கப்பட்டவரை சிறப்பு உபகரணங்களைக் கொண்டு அகற்றினோம், ஆனால் பாதிக்கப்பட்டவர் அந்த இடத்தில் இறந்துவிட்டதாக மருத்துவ அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டது.

“அவரது சடலம் மேல் நடவடிக்கைக்காக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here