பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக மாவட்ட துணை கல்வி அதிகாரி ஒருவர் மீது குற்றச்சாட்டு

சண்டகான், ஆகஸ்ட் 30 :

மாவட்ட துணை கல்வி அதிகாரி ஒருவர், தந்து அதிகாரத்தை பயன்படுத்தி RM50,400 மதிப்பிலான பள்ளி சிற்றுண்டிச்சாலை ஒப்பந்தத்தை தனது உறவினருக்கு சொந்தமான நிறுவனத்திற்கு வழங்கியதற்காக, தனது பதிவியை துஷ்பிரயோகம் செய்ததாக இன்று செவ்வாய்க்கிழமை (ஆக. 30) அமர்வு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டார்.

மஹாலே @ மஹாலி ஜஹாயா, 48, என்ற குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு எதிரான குற்றச்சாட்டு அமர்வு நீதிமன்ற நீதிபதி அபு பக்கர் மனாட் முன்னிலையில் படித்துக்காட்டப்பட்டபோது, அவர் தான் குற்றமற்றவர் என கூறி விசாரணை கோரினார்.

நவம்பர் 11, 2015 அன்று, கினபாடாங்கான் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் இந்தக் குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

அவர் தனது மருமகன் அமிருதின் பாரோ, 37 க்கு சொந்தமான டாமாய் எண்டர்பிரைஸ் நிறுவனத்திற்கு, டிசம்பர் 1, 2015 முதல் நவம்பர் 30, 2018 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு சிற்றுண்டிச்சாலை ஒப்பந்தத்தை பெறுவதற்கு தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் (எம்ஏசிசி) சட்டம் 2009 இன் பிரிவு 23 (1) இன் கீழ் கட்டமைக்கப்பட்ட குற்றச்சாட்டு, அதே சட்டத்தின் பிரிவு 24 (1) இன் கீழ் தண்டனைக்குரியது, இது குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் அத்தோடு லஞ்சத்தின் மதிப்பில் ஐந்து மடங்கு அல்லது RM10,000, எது அதிகமோ அது விதிக்கப்பட வழிசெய்யும்.

இவ்வழக்கில் அக்டோபர் 7 ஆம் தேதியை குறிப்பிடுவதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here