மலேசிய தகவல் துறை அறிவோம் – தெளிவோம்

கே: மலேசிய தகவல் துறையின்  நிகழ்ச்சிகள் குறித்து கூற முடியுமா?

ப: இவ்வாண்டைப் பொறுத்த வரையில் பிப்ரவரி மாதம் தொடங்கி ஜூன் 7ஆம் தேதி வரையில் நாடு தழுவிய அளவில் 4,014 மலேசியக் குடும்ப சமூக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. அதேபோல் வாகன – போக்குவரத்து சார்ந்து  20,985 இடங்களில் 4,593 நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

கே: சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள்?

  ப: சுதந்திர தினம் – மலேசிய தினத்தை முன்னிட்டு 3 முக்கிய நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஜுலை மாதத்தில் சுதந்திர மாதத் தொடக்கம், ஜாலூர் கெமிலாங் தேசியக் கொடியை பறக்கவிடும் நிகழ்ச்சி ஆகியவை நடத்தப்பட்டுள்ளன.   அதனை அடுத்து ஆகஸ்டு 31 தேசிய தினக் கொண்டாட்டம் நடத்தப்படுகின்றது. அதன் பிறகு செப்டம்பர் 16ஆம் தேதி மலேசிய தினக் கொண்டாட்டம் நடைபெறும்.

கே: இவ்வாண்டு மலேசிய தகவல் துறையின் பதிப்பில் வெளிவந்துள்ள படைப்புகள் எத்தனை?

 ப:  இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி ஜூன் மாதம் வரையில் மொத்தம் 43 தலைப்புகளில் பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் 37 தலைப்புகள் கால அம்சத்தை ஒட்டிய பதிப்புகளாகும். இந்தப் பதிப்புகள் அனைத்தும் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளன.

கே: மலேசிய தகவல் துறையின் மாநில அளவிலான அலுவலகங்கள் எத்தனை உள்ளன?

 ப : நாட்டில் உள்ள 13 மாநிலங்கள், 2 கூட்டரசுப் பிரதேசங்களில் தலா 1 மாநிலத் தலைமையக அலுவலகம் உள்ளது. அதே போல் மாவட்ட அலுவலகங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாறுபட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here