15-வது பொதுத் தேர்தலில் அதிக பெண் வேட்பாளர்களை போட்டியிட செய்வது தொடர்பில் பாஸ் யோசனை

அலோர் ஸ்டார், செப்டம்பர் 2 :

வரவிருக்கும் 15-வது பொதுத் தேர்தலில் (GE15) அதிக பெண் வேட்பாளர்களைக் பங்குபெறச் செய்வது குறித்து பாஸ் கட்சி பரிசீலித்து வருகிறது என்று அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் தெரிவித்துள்ளார்.

GE15 இல் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்த 30 விழுக்காடு பெண்களின் ஒதுக்கீட்டை நிறைவேற்ற வேண்டியதன் அவசியத்தை இஸ்லாமியக் கட்சியான பாஸ் உணர்ந்துள்ளது, ஏனெனில் எமது வாக்காளர்களில் பாதி பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.

“அடுத்த பொதுத் தேர்தலில் கட்சியில் இருந்து அதிக பெண்களை சேர்க்க வேண்டும் என்று கட்சியின் மகளிர் பிரிவு கேட்டுக் கொண்டதை நாங்கள் பரிசீலிப்போம்” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 2) சிக், டேவான் அல்-ஹானாவில் நடந்த பாஸ் கட்சியின் மகளிர் பிரிவு ஆண்டுக் கூட்டத்தில் ஆற்றிய தனது உரையின் போது கூறினார்.

கட்சியின் மகளிர் பிரிவின் முன்மொழியப்பட்ட பெயர்கள் கட்சித் தலைமையால் தீர்மானிக்கப்படுவதற்கு முன், கட்சியின் பல்வேறு பிரிவுகளில் முன்மொழியப்பட்ட ஏனைய பெயர்களுடன் ஆய்வு செய்யப்படும் என்று துவான் இப்ராஹிம் கூறினார்.

மேலும் கட்சியில் உள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், பெண்கள் வேட்புமனு தாக்கல் குறித்தும் கட்சி விவாதிக்கும் என்றார்.

பாஸின் மகளிர் பிரிவு ஆண்டுக் கூட்டத்தில் கட்சியின் 182 பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 800 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here