இளம்பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் கைது

அம்பாங், செப்டம்பர் 5 :

இங்குள்ள தாமன் டாகாங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், பதின்ம வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 32 வயது நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி, சனிக்கிழமை (செப்டம்பர் 3) பிற்பகல் 3.45 மணியளவில் தனது சகோதரியின் வீட்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தபோது, ​​சந்தேக நபர் அச்சிறுமியை மிக நெருக்கமாகப் பின்தொடர்ந்து, அவளைத் தொட முயன்றார் என்று அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைவர், துணை ஆணையர் முகமட் ஃபரூக் எஷாக் கூறினார்.

“பாதிக்கப்பட்டவர் ஓடி வந்து உதவி கோரி சத்தம் போட்டார்.

“பாதிக்கப்பட்டவரின் சகோதரியின் வருங்கால கணவர் தலையிட்டு சந்தேக நபரை பிடித்தார், பின்னர் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பாளர்கள் உதவியுடன் காவல்துறையைத் தொடர்பு கொண்டார்” என்று அவர் இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 5) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் கூறினார்.

பின்னர் சனிக்கிழமை மாலை 4.20 மணியளவில் போலீசார் வந்து சந்தேக நபரை கைது செய்தனர்.

“சந்தேக நபருக்கு போதைப்பொருள் தொடர்பான குற்றத்திற்கான முந்தைய குற்றப் பதிவு உள்ளது சோதனையில் கண்டறியப்பட்டது.

மேலும் அவர் விசாரணைக்காக வரும் புதன்கிழமை (செப்டம்பர் 7) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 509 இன் கீழ், அடக்கத்தை மீறுதல் மற்றும் தகாத முறையில் நடந்து கொண்டதற்காக விசாரணை செய்யப்பட்டது என்று ஏசிபி முகமட் ஃபாரூக் கூறினார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here