ஊழல், பணமோசடி குற்றச்சாட்டுகளை ரத்து செய்யும் முயற்சியில் அஜீஸ் தோல்வி

பணமோசடி குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் அஜீஸ் அப்துல் ரஹீமின் முயற்சியை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று நிராகரித்தது. மூன்று ஊழல் குற்றச்சாட்டுகளும் சந்தேகத்திற்கு இடமில்லாமல் தெளிவாக இருக்கிறது என்று நீதிபதி கமாலுதீன் முகமட் தெரிவித்தார். அவருடன் அமர்ந்திருந்த மற்ற நீதிபதிகள் அபுபக்கர் ஜெய்ஸ் மற்றும் சே முகமது ருசிமா கசாலி ஆகியோர் ஆவர்.

எவ்வாறாயினும், அஜீஸின் 10 பணமோசடி குற்றச்சாட்டுகளில் நான்கை ரத்து செய்வதற்கான முயற்சியை நீதிமன்றம் அனுமதித்தது. ஏனெனில் நான்கு குற்றச்சாட்டுகளின் கீழ் கூறப்பட்ட இடங்கள் “too wide.

அஜீஸின்  அந்த விசாரணையை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தொடர நீதிமன்றம் உத்தரவிட்டது. பேராக் மற்றும் கெடாவில் சாலைத் திட்டங்கள் தொடர்பாக 5.2 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக 2019 இல் அஜீஸ் மீது குற்றம் சாட்டப்பட்டது.

Menuju Asas Sdn Bhd என்ற நிறுவனத்திடமிருந்து RM13.9 மில்லியன் பணமோசடி செய்ததையும் அவர் எதிர்கொள்கிறார். அம்னோ உச்சமன்ற உறுப்பினர் தனது ஊழல் மற்றும் பணமோசடி குற்றச்சாட்டுகளை தவறான நம்பிக்கையில் செய்யப்பட்டதாகக் கூறி அவற்றை ரத்து செய்ய முயன்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here