‘நமக்கு உதவுபவர்களுக்கு நாம் உதவுவோம்’ – வெளிநாட்டு ஊழியர்கள் இலவசமாகப் பொருள்களை ‘வாங்க’ சிங்கப்பூரில் புதிய கடை

சிங்கப்பூர், செப்டம்பர் 5:

எண் 470, அப்­பர் பாய லேபா­ரில் புதி­தா­கத் திறக்­கப்­பட்டுள்ள கடை­யில், குடை­கள், பைகள், கால­ணி­கள், தண்­ணீர் பாட்­டில்­கள், காற்­றா­டி­கள், மெத்­தை­கள் போன்­ற­வற்றை வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இனி இல­வ­ச­மா கப் பெற்­றுக்­கொள்ள முடி­யும்.

‘இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ்’ (ItsRainingRaincoats) அமைப்பு, ‘இன்ஸ்­பை­யர்’ (InspIRRe) எனும் அந்­தக் கடை­யைத் தொடங்­கி­யுள்­ளது. பொது­மக்­கள் நன்­கொ­டை­யாக அளிக்­கும் பொருள்­கள் அந்தக் கடை­யில் வைக்­கப்­படும்.

இந்தக் கடை கட்­ட­டத்­தின் கீழ்த்­த­ளத்­தில் செயல்­படும். மேல்­த­ளத்­தில் ‘இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ்’ (ஐஆர்­ஆர்) அமைப்­பின் தொண்­டூ­ழி­யர்­கள் பணி­யாற்­ற­வும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள் இளைப்­பா­ற­வும் இட­வ­சதியைக் கொண்டிருக்கும்.

‘இன்ஸ்­பை­யர்’ கடை­யில் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், மாண­வர்­க­ளு­டன் வர்த்­த­கங்­கள், கல்வி நிலை­யங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான நிகழ்ச்சி­களும் நடத்­தப்­படும். குளி­ரூட்­டப்­பட்ட இந்த அறை­யில், இல­வச இணைய இணைப்­பும் உண்டு.

ஓய்­வு­நாட்­களில் நண்­பர்­க­ளைச் சந்­திக்­க­வும் உட்­கார்ந்து பேச­வும், படிக்­க­வும் தனிப்­பட்ட இடத்தை நாடும் ஊழி­யர்­களும் இந்த அறை­யைப் பயன்­ப­டுத்­த­லாம் என்­றார் ‘ஐஆர்­ஆர்’ அமைப்­பின் நிறு­வ­னர் தீபா ஸ்வாமி நா­தன்.

இரண்டு மணி நேரத்­திற்கு இரு­பது ஊழி­யர்­களே கடை­யில் இருக்க முடி­யும் என்­ப­தால், கடைக்கு வரும்­முன், அமைப்­பின் செய­லி­யில் அவர்கள் முன்­ ப­திவு செய்ய வேண்­டும்.

­க­டையை நேற்­று­முன்­தி­னம் திறந்­து­வைத்­த தற்­காப்பு, மனி­த­வள அமைச்­சுகளுக்­கான மூத்த துணை அமைச்­சர் ஜாக்கி முக­மட் கூறும்போது, ” லாப நோக்­கமற்ற அமைப்­பான ‘ஐஆர்­ஆர்’ இதில் திறம்­ப­டச் செய­லாற்றி வரு­கிறது என்றும் இந்த அ­மைப்பு மேலும் பல நட­வ­டிக்­கைளை மேற்­கொள்ள அர­சாங்­கம் ஆத­ரவு அளிக்­கும்” என்றும் தெரிவித்தார்.

சிங்­கப்­பூர் சமூ­கத்­தின் அங்­கத்­தி­ன­ரான வெளி­நாட்டு ஊழி­யர் களுக்கு வச­தி­யான சூழலை உரு­வாக்­கித் தர நாம் கட­மைப்­பட்­டுள்­ளோம் என்­று அவர் கூறினார்.

“சிங்­கப்­பூர் சமூ­கத்­தின் அங்­கத்­தி­ன­ரான வெளி­நாட்டு ஊழி­யர்­களை மக்­கள் வேறு­ப­டுத்­திப் பார்க்­கக்கூடாது. அதே­போல வெளி­நாட்டு ஊழி­யர்­களும் சிங்­கப்­பூ­ரைத் தங்­கள் தாய்­நாடு போலக் கருத வேண்­டும்,” என்று திரு ஜாக்கி வலி­யு­றுத்­தி­னார்.

‘ஸ்பேஸ் மேட்­ரிக்ஸ்’ எனப்­படும் வடி­வ­மைப்பு நிறு­வ­னம், கட்­ட­ணம் பெறா­மல் கடை­யின் புதுப்­பிப்­புப் பணி­க­ளைச் செய்து கொடுத்­துள்­ளது. பொது­மக்­களும் நிறு­வ­னங்­களும் நன்­கொ­டை­யாக வழங்­கிய பொருள்­களை கொண்டு அவ்விடம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

“நமக்கு உத­வு­ப­வர்­க­ளுக்கு நாமும் கைமாறு செய்ய வேண்­டும். உதவி தேவைப்­படும் ஊழி­யர்­களுக்கு உத­வு­வ­தில் மன­நி­றை­வும் கிடைக்­கிறது. ஊழி­யர்­கள் தங்­கள் நேரத்தை இத்­த­கைய தொண்­டூ­ழியப் பணி­களில் செல­வ­ழிக்­க­லாம்,” என்­றார் ஒரு தொண்டூழியர் .

பொருள்­களை நன்­கொ­டை­யாக அளிக்க விரும்­பு­வோர் ‘இட்ஸ்­ரெய்­னிங்­ரெய்ன்­கோட்ஸ்’ அமைப்பை நேர­டி­யா­கத் தொடர்பு கொள்­ள­லாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here