பெட்டாலிங் ஜெயா: பிகேஆர் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது தற்போதைய போர்ட்டிக்சன் நாடாளுமன்றத் தொகுதியை விட்டு தம்பூன் செல்வாரா என்பது குறித்து முடிவு செய்யவில்லை என்று மலேசியாகினி செய்தி வெளியிட்டுள்ளது.
தம்பூன் மற்றும் வேறு சில நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதற்கான ஆலோசனைகள் இருப்பதாக அவர் ஒரு நிகழ்வில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
நான் தற்போது அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். போர்ட்டிக்சனில் உள்ள எனது நண்பர்கள் என்னை அங்கேயே இருக்கச் சொன்னார்கள். அதே சமயம் தம்புன் (பிகேஆர்) அவர்கள் (நான் அங்கு போட்டியிட) தயாராக இருப்பதாகக் கூறினார்கள். மேலும் சில தொகுதிகளும் கூட என்று அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து முடிவெடுத்த பிறகு அறிவிப்பதாக அன்வார் கூறினார்.









