மலேசியக் குடும்பம் ஒற்றுமையே வலிமை எனும் கருப்பொருளில் நாட்டின் 65ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு மொத்த வியாபார மையமான GM Klang நாட்டின் பல்வேறு இனங்களின் ஒற்றுமையையும் சுபிட்சத்தையும் பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு கண்கவர் நிகழ்ச்சிகளை நடத்துகிறது. மலேசியா – நம் வீடு 2022 எனும் தலைப்பில் பிரச்சார இயக்கத்தையும் அது மேற்கொண்டிருக்கிறது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 2022 ஆகஸ்டு 31ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை இந்த மொத்த வியாபார மையத்திற்கு வருகைபுரியும் வாடிக்கையாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் GM Klang பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருக்கின்றது.
அதேசமயம் செலவிடுங்கள் – சிறப்புப் பரிசைப் பெறுங்கள் என்ற பிரச்சாரத்தின் வழி ஆகஸ்டு 31ஆம் தேதி தொடங்கி ஙெ்ப்டம்பர் 10, 11, 16, 17 ஆகிய 5 தினங்களில் நடத்தப்படும் சிறப்புப் பிரச்சாரத்தின்போது 200 ரிங்கிட் மேலும் அதற்குக் கூடுதலாகச் செலவிடுபவர்கள் GM Klang பிரத்தியேக டி-சட்டையைச் சிறப்புப் பரிசாகப் பெறலாம்.
மேலும் புதையல் தேடுதல், மெர்டேக்கா ஃபேஷன் தேடுதல், பாடல் படைப்பு, இசைக்குழுக்களின் இசைமழை, சிறார்களுக்கான தங்லோங் வர்ணம் தீட்டும் போட்டி என நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. GM Klang மாஸ்கோட் முயல் மேலும் பல கண்கவர் ஆடைகள் அணிந்து கலைஞர்கள் வாடிக்கையாளர்களையும் பொதுமக்களையும் மகிழ்விப்பர்.
ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் கொண்டாடப்படும் மெர்டேக்கா, குவே பூலான், மலேசிய தினம் ஆகிய மூன்று கொண்டாட்டங்களை முன்னிட்டு மலேசியா – நம் வீடு 2022 எனும் தலைப்பில் நாட்டின் பல்வேறு இனங்களைப் பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகளை GM Klang ஏற்பாடு செய்கிறது என்று அதன் தொடர்புத்துறை நிர்வாகி நோர்சுஹைடா ஒஸ்மான் கூறினார்.
அனைத்து இனக் குடும்பங்களையும் அவர்களின் நட்பு வட்டங்களையும் பல்வேறு சமுதாய மக்களையும் மலேசியக் குடும்பமாக ஒன்றிணைத்து இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்க வைப்பதுதான் இந்நிகழ்ச்சிகளின் தலையாய நோக்கமாகும் என்றும் அவர் சொன்னார்.
மலேசியா நம் தாய் வீடு, நாம் அனைவரும் ஒன்றிணைந்து அர்த்தமுள்ள மகிழ்ச்சியால் அதனை அலங்கரிக்கச் செய்வோம். சௌகரியமான மேலும் சுதந்திரமான மலேசிய சமுதாயமாக மலேசியக் குழுமமாக இந்நாட்டில் தொடர்ந்து மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையை வாழ்வதற்கு இதுபோன்ற நிகழ்ச்சிகள் துணையாக இருக்கும்.
இதுவே எங்களின் இந்தப் பிரச்சாரத்தின் தலையாய அம்சமாகும். வாருங்கள் நாம் ஒன்றிணைந்து மலேசிய வீட்டைப் பாதுகாப்போம் எனவும் நோர்சுஹைடா அழைப்பு விடுத்தார். இதன் தொடர்பில் மேல் அதிகத் தகவல்களைப் பெறுவதற்கு GM Klang அதிகாரப்பூர்வ வலைத்தளம் (gmklang.com) அல்லது GM Klang சமூக வலைத்தளங்களில் வலம் வரலாம்.