பெர்லிஸ், கெடா மற்றும் பினாங்கில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.
பெர்லிஸ், கெடா (லங்காவி, குபாங் பாசு, படாங் டெராப், கோல மூடா, சிக் மற்றும் பாலிங்) மற்றும் பினாங்கு ஆகிய மாநிலங்கள் பாதிக்கப்படும் என்று மெட்மலேசியா இன்று முன்னதாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.