பிடோர் அருகே பறந்துகொண்டிருந்த ஹெலிகாப்டர் மாயம் – டத்தோஸ்ரீ வீ

ஈப்போ, செப்டம்பர் 11 :

சுபாங்கில் இருந்து ஈப்போவிற்கு இன்று காலை ஒரு பைலட்டுடன் பறந்து கொண்டிருந்த ஹெலிகாப்டர், சிறிது நேரத்தில் பிடோர் அருகே காணாமல் போனதாக கூறப்படுகிறது.

தனியாருக்குச் சொந்தமான யூரோகாப்டர் ஹெலிகாப்டர், சுல்தான் அப்துல் அஜீஸ் ஷா விமான நிலையத்தில் இருந்து காலை 11.37 மணிக்கு புறப்பட்டு, நண்பகல் 12.37 மணிக்கு சுல்தான் அஸ்லான் ஷா விமான நிலையத்தில் தரையிறங்கி இருக்க வேண்டும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ வீ கா சியோங் தெரிவித்தார்.

இருப்பினும், விமானம் காணாமல் போனதாக மலேசியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் (CAAM) அறிவிக்கும் முன், நண்பகல் 12.16 மணிக்கு கோலாலம்பூர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்துடன் (KLATCC) ரேடார் தொடர்பை இழந்ததாக அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார்.

விமானத்தின் கடைசியாக அறியப்பட்ட இடம் பிடோருக்கு அருகிலுள்ள வனப்பகுதி என்றும் வீ கூறினார்.

“மலேசியாவின் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் காவல்துறை இந்த சம்பவம் குறித்து மேலும் அறிக்கைகளை வெளியிடும், அத்தோடு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை நடந்து வருகிறது” என்று அவர் இங்குள்ள கேடிஎம்பி ரயில் நிலையத்திற்குச் சென்ற பிறகு கூறினார்.

தாப்பா காவல்துறையின் ஒத்துழைப்புடன் அதன் தலைமைச் செயல் அதிகாரி, டத்தோ கேப்டன் செஸ்டர் வூ தலைமையிலான CAAM குழு தரைவழித் தேடுதலை மேற்கொண்டு வருவதாக வீ கூறினார்.

“விமானத்தின் சரியான இடத்தைக் குறிப்பிடுவதற்குத் தேவையான தகவல்களைத் தேடுதல் மற்றும் மீட்புக் குழு பெற வேண்டும் என்று நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம் என்றார்.

“கட்டுப்பாட்டு கோபுரத்தின் படி, விமானம் ஏற்கனவே தரை மட்டத்தில் இருப்பதை ரேடார் காட்டியது, ஆனால் நாம் உறுதியாக இருக்க வேண்டும் மற்றும் அனுமானங்களைச் செய்யக்கூடாது என்றும் இது தொடர்பில் CAAM ஆல் முழுமையான அறிக்கை வெளியிடப்படும்,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here