தாவாவில் 27 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா பறிமுதல்- மூன்று உடன்பிறப்புகள் உட்பட நான்கு பேர் கைது

தாவாவ், செப்டம்பர் 15 :

RM90,000 மதிப்புள்ள 27.31 கிலோ எடையுள்ள கஞ்சாவுடன் மூன்று உடன்பிறப்புகள் உட்பட நான்கு பேர் திங்கள்கிழமை (செப்டம்பர் 12) கைது செய்யப்பட்டனர்.

தாவாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் ஜாஸ்மின் ஹுசின் கூறுகையில், பொதுமக்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தாவாவ் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் போதைப்பொருள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், சபா காவல் தலைமையகத்தின் குழுவும் இணைந்து ஜாலான் அபாஸின் 16ஆவது கிலோமீட்டர்தூரத்திலுள்ள ஒரு வளாகத்தில் மாலை 5 மணியளவில் மேற்கொண்ட நடவடிக்கையில், அந்த நால்வரையும் கைது செய்ததாகத் தெரிவித்தார். .

கைது செய்யப்பட்டவர்களில் மூவர் உடன்பிறந்தவர்கள் – இரண்டு பெண்கள் மற்றும் ஒரு ஆண் – மற்றொரு ஆண் அவர்களது உறவினர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் 20 முதல் 43 வயதுடையவர்கள்.

குறித்த வளாகத்தில் “ஒரு காரில் இருந்து மூன்று பெட்டிகளை தூக்கிக் கொண்டிருந்தபோது இருவரை போலீசார் கைது செய்தனர். ஆய்வு முடிவுகளில் அப்பெட்டிகளில் ஒவ்வொன்றிலும் 29 கஞ்சா கட்டிகள் அடங்கிய பொட்டலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் “அந்த வாகனத்தில் இருந்த இரண்டு பெண்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட போதைப்பொருள்கள் தாவாவைச் சுற்றி விற்பனை செய்யப்படுவதாக சந்தேகிக்கப்படுகிறது,

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா 20,000 போதைப்பித்தர்கள் பயன்படுத்த போதுமானது ” என்று அவர் இன்று வியாழக்கிழமை (செப். 15) வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த வழக்கு 1952 ஆம் ஆண்டு ஆபத்தான மருந்துகள் சட்டத்தின் 39பி பிரிவின் கீழ் விசாரிக்கப்பட்டது என்று ஜாஸ்மின் ஹுசின் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here