துன் சாமிவேலுவின் மறைவினால் மலேசியா ஒரு முன்மாதிரியான தலைவரை இழந்துவிட்டது – பிரதமர் இரங்கல்

சுங்கை பீசி, செப்டம்பர் 15 :

முன்னாள் அமைச்சரவையின் புகழ்பெற்ற அமைச்சர் துன் எஸ்.சாமிவேலுவின் மறைவு நாட்டிற்கு பெரும் இழப்பு என டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

துன்சாமிவேலு மஇகாவை வழிநடத்தியபோது இந்திய சமூகத்தின் “ஒற்றுமையின் தந்தை” என்று பார்க்கப்பட்டதாக பிரதமர் கூறினார்.

“அவரால் இந்திய சமூகத்தை ஒன்றிணைக்க முடிந்தது என்றும் பொருளாதாரம் மற்றும் அவர்களின் பிற அடிப்படை நலன்களை சிறப்பாக மேம்படுத்தினார் என்றும் பிரதமர் கூறினார்.

இன்று வியாழன் (செப்டம்பர் 15) யுனிவர்சிட்டி பெர்தஹானான் நேஷனல் மலேசியாவில் (UPNM) செய்தியாளர்களை சந்தித்தபோது, ​​” நமது நாடு ஒரு முன்மாதிரியான தலைவரை இழந்துவிட்டது” என்று கூறினார்.

சாமிவேலு தனது 86வது வயதில் இன்று வியாழக்கிழமை காலமானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here