தங்க நகைக்கடையில் கொள்ளையிட்ட இருவரை 8 மணி நேரத்துக்குள் கைது செய்து போலீஸ் அதிரடி

அலோர் ஸ்டார், செப்டம்பர் 16 :

இங்குள்ள தண்டோப் பகுதியில் உள்ள தங்க நகைக் கடையில், நேற்று மூன்று தங்க வளையல்களை கொள்ளையிட்ட இருவரை, கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் எட்டு மணி நேரத்திற்குள் போலீசார் கைது செய்தனர்.

நேற்றிரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்ட 24 வயதுடைய இரண்டு சந்தேக நபர்களும், வெற்றிகரமாக கண்காணிக்கப்பட்டு கோல மூடாவின் பெர்வாஜா குருன் குடியிருப்பு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைமையகத்தின் (IPD) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கிடைத்த தகவல் மற்றும் உளவுத்துறையின் அடிப்படையில், உள்ளூர் ஆடவர்கள் இருவரும் வெற்றிகரமாகக் கைது செய்யப்பட்டதாக கோத்தா ஸ்டார் மாவட்ட காவல்துறைத் தலைவர், துணை ஆணையர் அஹ்மத் சுக்ரி மாட் அகிர் தெரிவித்தார்.

நேற்று காலை 11.30 மணியளவில், சந்தேக நபர்கள் முதலில் தங்கக் கடையில் நகை வாங்குவது போல் நடித்துள்ளார்.

“இருப்பினும், சம்பந்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் வளாகத்தில் இருந்து மூன்று தங்க வளையல்களுடன் புரோத்தோன் X50 காரில் ஏறி, தப்பித்து ஓடியதாக நம்பப்படுகிறது,” என்று அவர் இன்று தொடர்பு கொண்டபோது கூறினார்.

வணிக வளாகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் இந்தக் குற்றம் பதிவாகியுள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் இரண்டு மூத்த அதிகாரிகள் மற்றும் 10 பேர் கொண்ட செயல்பாட்டுக் குழு, சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க முடிந்ததாகவும் அஹ்மட் ஷுக்ரி கூறினார்.

கிடைத்த தகவல் மற்றும் புலனாய்வுப் பிரிவின் அடிப்படையில், இரண்டு சந்தேக நபர்களும் பெர்வாஜா குருன் வீட்டுத் தோட்டத்தில் கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“சம்பவத்தில் கொள்ளையிடப்பட்டதாக நம்பப்படும் மூன்று தங்க வளையல்களில் இரண்டையும் ஒரு தொகை பணத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

“இரண்டு சந்தேக நபர்களும் மேல் நடவடிக்கைக்காக IPD கோத்தா ஸ்டாருக்கு மீண்டும் கொண்டு வரப்பட்டனர் என்றும் குற்றவியல் சட்ட பிரிவு 380 இன் படி வழக்கு விசாரிக்கப்பட்டது,” என்றும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here