MySejahtera அதன் அதிகாரப்பூர்வ குறுஞ்செய்தி சேவை (SMS) எண்களில் மாற்றங்களை அறிவித்துள்ளது. இந்த மாற்றங்கள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 16) முதல் அமலுக்கு வரும்.
செப்டம்பர் 16, 2022 முதல், எந்த அறிவிப்புகளையும் அனுப்ப, இந்த SMS சேவை எண்களை மட்டுமே My Sejahtera பயன்படுத்தும். இந்த எண்கள் 68808, 68088 மற்றும் 63001″ என்று அது ட்வீட் செய்துள்ளது.
சந்தேகத்திற்கிடமான குறுஞ்செய்தி அல்லது அறியப்படாத எண்ணிலிருந்து அனுப்பப்படும் எந்தவொரு இணைப்பையும் பயனர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்ளப்படுகின்றனர்.