நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு – மலேசிய வானிலை ஆய்வு மையம்

கோலாலம்பூர், செப்டம்பர் 18 :

நெகிரி செம்பிலான், ஜோகூர், சரவாக் மற்றும் சபா ஆகிய நான்கு மாநிலங்களில் இன்று இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறித்த நான்கு மாநிலங்களும் இந்த மோசமான வானிலையை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மேலும் ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீற்றருக்கும் அதிகமான இடியுடன் கூடிய மழைக்கான அறிகுறிகள் தென்படுவதாக அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த வானிலை நிகழும் என எதிர்பார்க்கப்படுவைத்தால் இந்த எச்சரிக்கை விடுக்கப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை எச்சரிக்கை என்பது ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் செல்லக்கூடிய குறுகிய கால எச்சரிக்கையாகும் என்றும் அது தெரிவித்திருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here