கிரியானில் இரண்டு பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது

பேராக், கிரியான் மாவட்டத்தில் உள்ள இரண்டு வணிகப் பன்றிப் பண்ணைகளில் வார இறுதியில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பரவியது கண்டறியப்பட்டது. பாதிக்கப்பட்ட பண்ணைகளுக்கு சீல் வைக்கப்பட்டு, பன்றிகளை கொண்டு செல்லவும், வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கால்நடை துறை தெரிவித்துள்ளது.

பேராக்கில் இருந்து தீபகற்ப மலேசியாவின் மற்ற பகுதிகளுக்கு பன்றிகள் மற்றும் பன்றி இறைச்சி பொருட்களை கொண்டு செல்வதற்கான நிபந்தனைகளும் கடுமையாக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட பண்ணைகளில் மீதமுள்ள பன்றிகளை அழிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நோய் பரவல் கட்டுக்குள் உள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நோய் மனிதர்களுக்கு பரவாது என்பதால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here