5 ஆண்டுகளாகப் பள்ளிவாசல்களில் நிதியைத் திருடியவருக்கு 69 மாதங்கள் சிறைத் தண்டனை!

கோலாலம்பூர்:

கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பள்ளிவாசல்கள் மற்றும் சூராக்களின் நிதியைக் குறிவைத்துத் திருடி வந்த 37 வயது நபருக்கு, ஆயர்குரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நேற்று மொத்தம் 69 மாதங்கள் (5 ஆண்டுகள் 9 மாதங்கள்) சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

குற்றம் சாட்டப்பட்டவரான முஅம்மர் ராய்ட் அப்துல் மாலிக், மாஜிஸ்திரேட் நூர் ஹபிகா ராதியா ஜைனூர் முன்னிலையில் வாசிக்கப்பட்ட திருட்டு, குற்றவியல் அத்துமீறல், வீடு புகுந்து திருடுதல் மற்றும் அடையாள அட்டையைச் சமர்ப்பிக்கத் தவறியது தொடர்பான 9 குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆகஸ்ட் 2021 முதல் ஜூலை 2026 வரையிலான 5 ஆண்டுகளில் பல்வேறு வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்து இந்தத் திருட்டுகள் அரங்கேற்றப்பட்டுள்ளன.

மதராஸா அல் ஜாரியா, சூராவ் கம்போங் பெங்கலான் லன்ஜுட், சூராவ் அல் கரீம் ஆகிய இடங்களில் ரொக்கப் பணத்தைத் திருடியது. அஸ்-ஷாகிரின் பள்ளிவாசல், சூராவ் அல் முஸ்தகிம், சூராவ் அன்-நயீம் ஆகிய இடங்களில் அத்துமீறி நுழைந்தது.

அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் குற்றவாளி ஒப்புக்கொண்டதால் அவருக்கு 69 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், குற்றவாளி கைது செய்யப்பட்ட ஜூலை 18, 2026 முதலிருந்தே இந்தச் சிறைத் தண்டனைக் காலம் தொடங்கும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here