ஒவ்வொரு 4 வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி தகவல்

சர்வதேச அளவில் பசி என்பது மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடித்துள்ளதாகவும் இதனை தீர்க்க தீர்க்கமான முடிவை எடுக்க வேண்டும் என்றும் உலக தலைவர்களுக்கு 200க்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடிதம் எழுதியுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பசியால் மனிதர்கள் இறப்பதை தடுக்க இதை பற்றி ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

ஒவ்வொரு நான்கு வினாடிகளுக்கும் ஒருவர் பசியால் இறப்பதாக மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், 238 உள்ளூர் மற்றும் சர்வதேச அரசு நிறுவனங்கள் 77வது ஐ.நா பொதுச் சபையில் கூடியிருக்கும் தலைவர்களுக்கு உலகளாவிய பசியை முடிவுக்குக் கொண்டுவர உறுதியான நடவடிக்கை எடுக்க அழைப்பு விடுத்துள்ளனர்.

75 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் இக்கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளன. 345 மில்லியன் மக்கள் இப்போது கடுமையான பசியை அனுபவித்து வருகின்றனர், இது 2019 ஆம் ஆண்டிலிருந்து இருமடங்காக அதிகரித்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

21 ஆம் நூற்றாண்டில் மீண்டும் பஞ்சம் வரும் நிலை இருக்காது என்று உலகத் தலைவர்கள் வாக்குறுதி அளித்த போதிலும், சோமாலியாவில் பஞ்சம் மீண்டும் நெருங்கிவிட்டது. உலகம் முழுவதும், 45 நாடுகளில் 50 மில்லியன் மக்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

கடிதத்தில் கையொப்பமிட்டவர்களில் ஒருவரான யேமன் குடும்ப பராமரிப்பு சங்கத்தைச் சேர்ந்த மோகன்னா அகமது அலி எல்ஜபாலி இது தொடர்பாக கூறுகையில், விவசாயம் மற்றும் அறுவடைக்கு தேவையான பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன இந்த காலக்கட்டத்திலும் நாம் பட்டினி குறித்து பேசுவது பரிதாபத்துக்குரியது இது ஒரு நாடு தொடர்பானதோ ஒரு கண்டம் தொடர்பானதோ அல்ல, பசிக்கு ஒரு காரணம் மட்டுமே கிடையாது. அல்லது ஒரு கண்டத்தைப் பற்றியது அல்ல, பசிக்கு ஒரு காரணம் மட்டும் கிடையாது. இது ஒட்டுமொத்த மனிதகுலத்தின் அநீதியைப் பற்றியது’ என்று தெரிவித்தார்.

மேலும், மனிதகுலம் முழுவதும், ஒரே கிரகத்தைப் பகிர்ந்து வாழுந்து கொண்டு இருக்கின்றோம். மற்றவர்கள் நிறைய உணவைக் கொண்டிருக்கும்போது பல மக்கள் அவதிப்படுவதைப் பார்ப்பது கவலை அளிக்கிறது. உயிர்காக்கும் உணவு மற்றும் நீண்ட கால ஆதரவை உடனடியாக வழங்க கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here