செகாம்புட் எம்.பி.,2021ஆம் ஆண்டின் செலவு கணக்கினை வெளியிட்டார்; அரசாங்க எம்.பி.க்களையும் அவ்வாறே செய்ய அழைப்பு

செகாம்புட் நாடாளுமன்ற  உறுப்பினர் ஹன்னா யோவ் இன்று 2021 ஆம் ஆண்டிற்கான தனது தொகுதி பட்ஜெட் செலவினப் பட்டியலை வெளியிட்டார். மேலும் ஆளும் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதைச் செய்யுமாறு சவால் விடுத்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் அரசு ஒதுக்கீட்டுக்குக் கிடைத்ததாலும், எனது இணையதளத்தில் செலவுப் பட்டியலை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.

தேசிய முன்னணி மற்றும் பெரிகாத்தான் நேஷனல் அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இதையே செய்வதை நான் பார்க்க விரும்புகிறேன். குறிப்பாக 2020 இல் கோவிட் தொற்று மற்றும் 2021 இல் அவசரகாலத்தின் போது அவர்களின் செலவினங்களுக்காக என்று யோஹ் கூறினார்.

அவரது அறிக்கையுடன் 2021ல் செகாம்புட் தொகுதிக்கான செலவினங்களின் இணைப்பு, மொத்தம் RM586,239. என்னால் முழு நாட்டையும் மாற்ற முடியாது, ஆனால் எனது தொகுதியில் இருந்து தொடங்க முடியும். ஊழலை எதிர்த்துப் போராடுவது உங்களிடமும் நானும் இருந்து தொடங்குகிறது என்று அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here