ஜோகூர் பாரு, செப்டம்பர் 26:
பத்து பஹாட் மற்றும் பொந்தியானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று திங்கள்கிழமை (செப்டம்பர் 26) காலை 8 மணிக்கு 59 குடும்பங்களைச் சேர்ந்த 194 பேரிலிருந்து நன்பகல் 73 குடும்பங்களைச் சேர்ந்த 252 பேராக உயர்ந்துள்ளது.
இரண்டு மாவட்டங்களிலும் இயங்கிவந்த தற்காலிக நிவாரண மையங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஐந்தாக அதிகரித்துள்ளதாக ஜோகூர் குடிமைத் தற்காப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
“பொந்தியானில் இரண்டு மையங்களும் பத்து பஹாட்டில் மூன்று மையங்களும் உள்ளன என்றார்.









