15வது பொதுத்தேர்தலின் போலீஸ் செயல்பாட்டு இயக்குநராக ஆணையர் ஹசானி கசாலி நியமனம்

கோலாலம்பூர், செப்டம்பர் 26 :

வரும் 15வது பொதுத் தேர்தலுக்கான புக்கிட் அமானின் செயல்பாட்டு இயக்குநராக ஆணையர் டத்தோஸ்ரீ ஹசானி கசாலி நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது புக்கிட் அமான் உள்ளக பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை இயக்குனராக இருக்கும் ஆணையர் ஹசானி, தேர்தலின் போது அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கையை ஒருங்கமைத்தது வழிநடத்துவார் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.

இன்று திங்களன்று (செப்டம்பர் 25) புக்கிட் அமானின் மாதாந்திர கூட்டத்தின் போது அவர் தனது உரையில், “ஆணையர் ஹசானியின் கீழ், தேர்தல் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பாதுகாக்க அனைத்து துறைகளும் ஒன்றாக அணிதிரட்டப்பட்டு, அவை முறையாக வழிநடத்தப்படும் என்று எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது” என்றார்.

அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் எப்போதும் விழிப்புடன் இருக்கவும், தங்கள் பொறுப்புகளை புரிந்து கொள்ளவும் அவர் நினைவூட்டினார்.

மேலும் “சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தேர்தல் குற்றச் சட்டம் 1954 மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களின் கீழ் காவல்துறைக்கு வழங்கப்பட்ட அதிகார வரம்பு பற்றிய அறிவு இருக்க வேண்டும்.

“காவல்துறையின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் எந்தவொரு எதிர்மறையான தாக்கங்களையும் தடுக்க, அனைத்து அதிகாரிகளும் பணியாளர்களும் தங்கள் கடமைகளை தொழில் ரீதியாக செய்ய வேண்டும்.

“நம் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவும், நம் வார்த்தைகளை மனதில் கொள்ளவும், குறிப்பாக ஆத்திரமூட்டும் சூழ்நிலைகளைக் கையாளும் போது, ​​உயர் தொழில்முறைத் திறனைப் பராமரிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும்.

“அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை கையாளும் போது நாம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

புக்கிட் அமான் அமைதியான தேர்தலை உறுதி செய்வதற்காக முறையான திட்டமிடலுடன் அதன் அனைத்து நடவடிக்கைகளையும் மேம்படுத்தும் என்று ஐஜிபி கூறினார்.

“அதே நேரத்தில், பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கைப் பாதுகாப்பதில் எங்கள் முக்கிய பங்கு கைவிடப்படாது என்றார்.

“கோவிட் -19 இல் இருந்து நாடு இன்னும் முழுமையாகப் பாதுகாப்பாக இல்லை, எனவே அனைத்து காவல்துறை அதிகாரிகளும் தொற்று பரவுவதைத் தடுக்க நிலையான இயக்க நடைமுறைகளை (SOP) கடைபிடிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here