கோல லங்காட்டை சுற்றியுள்ள கடற்பகுதிகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்

கோல லங்காட் மாவட்டத்தைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதிகளில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு  அதிக அலைகள் தாக்கும் என்று எதிர்பார்க்கப்படும் அலை நிகழ்வு காரணமாக பொதுமக்கள் அங்கு இருப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

கோல லங்காட் நகராண்மைக்கழகம் (MPKL),முகநூலின் ஒரு பதிவின் மூலம், பந்தாய் மோரீப், பந்தாய் மோரீப் பாரு, பந்தாய் கெலனாங், பந்தாய் பத்து லாவூட், பந்தாய் சுனாங் மற்றும் தஞ்சோங் செபாட் ஜெட்டி ஆகியவை வியாழன் (செப்டம்பர் 29) வரை பொதுமக்களுக்கு மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.  குளியல், முகாம், சுற்றுலா, மீன்பிடித்தல், படகு சவாரி மற்றும் வர்த்தகம் போன்ற எந்த நடவடிக்கைகளும் இப்பகுதியில் அனுமதிக்கப்படாது என்று அது மேலும் கூறியது.

இந்த நிகழ்வு தொடர்பான மேலதிக விசாரணைகள் மற்றும் புகார்களுக்கு பொதுமக்கள் MPKL விரைவுப் படையை 012-3004256 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here