குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் பெண், தனது கணவரிடமிருந்து அடைக்கலம் தேடுகிறார்

ஈப்போ, செப். 28:

குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டதாக நம்பப்படும் 36 வயதான பெண்மணி ஒருவர், தனது கணவரிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு ஒரு அடைக்கலம் தேடுவதாக தெரிவித்தார்.

தன்னை “W” என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அந்தப் பெண், கணவர் தன்னை துன்புறுத்துவதால் தான் அவரின் உறவை முறித்துக்கொள்ள விரும்புவதாகவும், தானும் தாயாரும் தங்குவதற்கு ஒரு அறையை வாடகைக்கு பெற தான் விரும்புவதாவும் கூறியதாக, ஈப்போ பாராட் எம்சிஏ ஒருங்கிணைப்பாளர், லோ குவோ நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

“இனி என் கணவர் இருக்கும் அதே வீட்டில் நான் தங்க விரும்பவில்லை” , “நீதிமன்றத்தின் உத்தரவின்படி எனது கணவர் தற்போது உலு கிந்தா மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ளார்,” என்று அப்பெண்மணி கூறியதாக லோ தெரிவித்தார்.

“கணவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று எனக்குத் தெரியவில்லை, (ஆனால் அவர்) வீட்டிற்கு வரும்போது நான் அவரை மீண்டும் சந்திக்க வேண்டும், ஆனால் நான் மிகுந்த மனா அழுத்தத்தில் உள்ளேன்” என்று W கூறினார்.

மேலும் கணவர் மனநலம் குன்றியவர் என சமூக நல அதிகாரிகளிடம் பதிவு செய்துள்ளார் மற்றும் அவர் மாற்றுத்திறனாளிகள் (OKU) அட்டையை வைத்திருக்கிறார்.

“எனது கணவருடன் மற்றொரு கடுமையான வாக்குவாதத்திற்குப் பிறகு இந்த ஆண்டின் நடுப்பகுதியில் எனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.பக்கத்து வீட்டுக்காரரின் உதவியுடன் ஆம்புலன்ஸில் நான் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டேன், அங்கு மருத்துவ அதிகாரி போலீஸ் புகார் செய்தார்,” என்று அவர் கூறினார்.

ஒரு மூத்த காவல்துறை அதிகாரியின் கூற்றுப்படி, பெண்ணின் கணவர் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக தண்டனைச் சட்டத்தின் பிரிவு 324 இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

“அந்த நபர் குற்றமற்றவர் என்று கூறியதால், அவ்வழக்கு நீதிமன்றத்தில் இன்னும் நிலுவையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

இதற்கிடையில், குடும்ப வன்முறையால் பாதிக்கப்படுபவர்கள் அமைதியாக இருக்கக்கூடாது என்று லோ கூறியதுடன் அதனை எதிர்த்து அவர்கள் போலீஸ் புகார் அளிக்க அவர்களுக்கு தைரியம் வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here