கோலாலம்பூர் தித்திவங்சாவில் நிலத்தடி கேபிள்களை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் ஒன்று விழுந்தது. சமூக வலைதளங்களில் வைரலான இந்த சம்பவத்தின் புகைப்படங்கள், ஓட்டையின் பக்கத்தில் கார் கிடப்பதைக் காட்டுகிறது.
இந்த சம்பவம் இன்று காலை 7.30 மணியளவில் ஜாலான் AU3 தித்திவங்சாவில் நடந்ததாக வங்சா மாஜு OCPD அஷாரி அபு சாமா தெரிவித்தார். 32 வயதுடைய பெண் ஒருவர் தனது காரை, நிலத்தடி கேபிள் பழுதுபார்க்கும் பகுதியில் இருந்த தண்ணீர் தடுப்புச் சுவரில் மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் ஓட்டுநரும் பயணிகளும் காயமின்றி தப்பினர் என்று அவர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.









