மலேசிய கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 வியட்நாமியர்கள் கைது

மெர்சிங், செப்.28 :

பூலாவ் அவுருக்கு வடகிழக்கே 12 கடல் மைல் தொலைவில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டதற்காக வியட்நாமிய கேப்டன் உட்பட 19 பணியாளர்களை மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினர் நேற்று கைது செய்தனர்.

RM3.1 மில்லியன் மதிப்புள்ள சுமார் 3,000 கிலோகிராம் எடையுள்ள இரண்டு மீன்பிடி கப்பல்கள், மீன்பிடி உபகரணங்கள் மற்றும் அவர்கள் பிடித்த மீன்கள் என்பவற்றை பறிமுதல் செய்ததாக மெர்சிங் கடல்சார் மண்டல இயக்குநர், கமாண்டர் கைருல் நிஜாம் மிஸ்ரான் தெரிவித்தார்.

“அப்பகுதியிலுள்ள ஒரு மீன்பிடி படகு ஊழியர்களிடமிருந்து குறித்த படகு பற்றிய தகவலைப் பெற்றதன் பின்னர், அமலாக்கத்துறையின் ரோந்துப் படகுகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

“வியட்நாமிய மாலுமி உட்பட 19 உறுப்பினர்கள் தங்கள் அடையாள ஆவணங்களை வழங்கத் தவறிவிட்டனர் என்றும் 18 முதல் 51 வயதுடைய ஆனைத்து வியட்நாமியர்களும் மேலதிக விசாரணைக்காக தெலுக் கேடிங் கடல்சார் போஸ்டுக்கு அழைத்து வரப்பட்டனர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

அனுமதியின்றி மலேசியக் கடற்பரப்பில் நுழைந்து மீன்பிடித்ததற்காக, மீன்பிடிச் சட்டம் 1985ன் கீழும் செல்லுபடியாகும் அடையாள ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறியதற்காக குடிவரவுச் சட்டம் 1959/1963இன் கீழும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here