ஆட்டை விழுங்கிய மலைப்பாம்பு – கூலாயில் சம்பவம்

கூலாய், செப்.28 :

இங்குள்ள ஃபெல்டா இனாஸ் என்ற இடத்தில், 6 மீட்டர் நீளமான மலைப்பாம்பு ஒன்று ஆட்டை விழுங்கிய பிறகு, ஆட்டுப் பண்ணையை விட்டு வெளியேற முடியாமல் பிடிபட்டது.

இன்று புதன் கிழமை (செப்.28) காலை 7.21 மணியளவில் ஆட்டின் உரிமையாளரிடமிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக கூலாய் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் தலைவர், மூத்த அதிகாரி பக்தியார் செலாமாட் தெரிவித்தார்.

“ஆட்டுப் பண்ணையில் ஒரு பெரிய சத்தம் கேட்டதாகவும் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு பாம்பு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாகவும்” அழைப்பாளர் தெரிவித்தார்.

மலைப்பாம்பு ஆட்டை விழுங்கியதால் அதன் விரிந்த வயிறு காரணமாக அதனால் பண்ணையை விட்டு வெளியேற முடியவில்லை.

“பாம்பு மிகவும் பசியுடன் இருந்திருக்க வேண்டும் அதனாலேயே மக்கள்தொகை நிறைந்த பகுதிக்குள் நுழைந்திருக்கலாம் ” என்று பக்தியார் கூறினார்.

இந்த சம்பவத்தின் வீடியோ பதிவு செய்யப்பட்டு ஓராங் கூலாய் என்ற முகநூல் பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. புதன்கிழமை பிற்பகல் 3 மணி நிலவரப்படி, இது 129,000 பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here