ஜோகூர் சலவை இயந்திரத்தில் ஆறு அடி மலைப்பாம்பு கண்டெடுக்கப்பட்டது

ஜோகூர் பாரு, ஜாலான் இம்பியான் எமாஸ் 22, தாமான் இம்பியான் எமாஸில் உள்ள சலவை இயந்திரத்தில் துணி துவைக்க முயன்ற வாடிக்கையாளர்,  ஒரு மலைப்பாம்பு இருந்ததால் திகிலுடன் பின்வாங்கினார்.

பாம்பைக் கண்ட வாடிக்கையாளர் உடனடியாக சலவை உரிமையாளருக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் உதவிக்காக தீயணைப்புத் துறைக்கு அழைப்பு விடுத்தார்.

லார்கின் நிலையத்தின் துணை தீயணைப்பு கண்காணிப்பாளர் I, சுஹைமி முகமட் ஜமால் கூறுகையில், காலை 9.41 மணியளவில் உரிமையாளரிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்ற மூன்று தீயணைப்பு வீரர்கள் அந்த இடத்திற்கு விரைந்தனர்.

ஆறு அடி மற்றும் 20 கிலோ எடையுள்ள மலைப்பாம்பு ஆக்ரோஷமாக இல்லாததால் ஐந்து நிமிடங்களில் கண்ணியைப் பயன்படுத்தி பிடிபட்டது என்று அவர் கூறினார். பின்னர் அது குடியிருப்புகளிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதியில் விடுவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here