தேர்தல் நடத்துவதற்கு முன் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுங்கள் என்கிறார் அஸ்மின் அலி

கோலாலம்பூர், அக்டோபர் 6 :

‘கோவிட் -19 க்கு பின், தற்போது நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக மீட்சியடைந்து வருவதுடன் அதன் நேர்மறையான விளைவுகளை மக்களால் நன்றாக உணர வழிசெய்யும் வகையில், முன்கூட்டியே தேர்தல் நடத்துவதை நிறுத்துங்கள்’ என்றும் “நாடாளுமன்றத்தைக் கலைக்கும் முயற்சிகளை இப்போது மேற்கொள்ள வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” என்று அனைத்துலக வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் டத்தோஸ்ரீ அஸ்மின் அலி தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை (அக். 6) நாடாளுமன்றத்தில் லிம் குவான் எங் (PH-பாகன்) எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் முகமாக “நாட்டில் பொருளாதார குறிகாட்டிகள் சிறப்பாக வளர்ச்சியடைந்து வருகின்றன, ஆனால் அவை ஒரு நிலைக்கு வர எங்களுக்கு இன்னும் சிறிது நேரம் தேவை, ” என்று டத்தோஸ்ரீ அஸ்மின் கூறினார்.

நாடாளுமன்றம் விரைவில் கலைக்கப்படுவதற்கான அறிகுறிகள் தென்படுவதால், டிரான்ஸ்-பசிபிக் கூட்டாண்மைக்கான விரிவான மற்றும் முற்போக்கான ஒப்பந்தத்தை (CPTPP) நடைமுறைப்படுத்துவதற்கான சட்டங்களைத் திருத்துவதற்கான முயற்சிகள் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் தொடருமா என்பதை லிம் அறிய விரும்பினார்.

15வது பொதுத் தேர்தலுக்குப் பிறகு (GE15) யார் புதிய அரசாங்கத்தை அமைத்தாலும் CPTPPயை அமல்படுத்துவார்கள், அதாவது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு GE15 நடத்தப்பட்டாலும் கூட CPTPP செயல்முறைக்கான முயற்சிகளைத் தொடருவோம் என்றும் அது நாட்டிற்கும் மக்களுக்கும் பயனளிக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here