குறிக்கோள்:

மீட்சி நடவடிக்கைகளை வலுப்படுத்துவது, பொருளாதாரத்தின் வலிமையையும் மலேசியக் குடும்பத்தின் சுபிட்சத்தையும் உறுதிசெய்வதற்கான முன்னோக்க வழிமுறைகளை எளிதாக்குவது.
2023 வரவுசெலவுத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும் அம்சங்கள்
அடுத்தாண்டிற்கான வரவுசெலவுத் திட்டத்தில் 4 பிரிவுகளில் அதிகக் கவனம் செலுத்தப்படுகின்றது. அந்தப் பிரிவுகள் மக்கள், வர்த்தகம், பொருளாதாரம், அரசாங்கம் ஆகியவை ஆகும்.
- மக்கள்
– வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் வருமானத்தைப் பெருக்கவும் மேம்பாட்டு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துதல்.
– சமூகப் பாதுகாப்பினை வலுப்படுத்துதல்
– வாழ்வாதாரச் செலவினங்களை எதிர்கொள்வதற்கு ஒருங்கிணைந்த உதவிகளை ஏற்படுத்தித் தருதல்
– ஆக்கப்பூர்வமான சுபிட்சத்திற்கு வாழ்வாதாரத்தைத் தரம் உயர்த்துதல்

- வர்த்தகம்
– கோவிட்-19 தொற்றுப்பரவல் தாக்கத்தினால் பாதிக்கப்பட்ட தொழில் துறையினருக்கும் சுற்றுலாத் துறையினருக்கும் ஆதரவு வழங்குதல்.
– சிறு, நடுத்தர தொழில்துறையினரின் செயல்பாடுகளின் தரம் உயர்த்துதல்
– நவீனமயம் உட்பட பல்வேறு அம்சங்கள் வாயிலாக உற்பத்தி அளவினை அதிகப்படுத்துதல்
– புதிய மேம்பாட்டுத் துறைகளை அடையாளம் கண்டு அதன் தர சங்கிலித் தொடர்பினை வலுப்படுத்துதல்
- பொருளாதாரம்
– இஸ்லாமியப் பொருளாதாரத்தை ஒப்பிடுகையில் அதன் கூடுதல் பலத்தைப் பயனாக்குதல்
– பொது மேம்பாட்டு வாயிலாக சமூகம், பிராந்தியம் இடையே உள்ள தூர அளவைக் குறைத்தல்
– பசுமை மேம்பாடு, ஒருங்கிணைந்த மேம்பாட்டை ஊக்குவித்தல்
- அரசாங்கம்
– பொதுச்சேவை தருவிப்பினை தரம் உயர்த்துதல், வர்த்தகம் மேற்கொள்வதற்கான
செயல்பாடுகளை எளிதாக்குதல்
– உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துதல்
– பொது சுகாதாரத் தர பலத்தை வலுப்படுத்துதல்
– பேரிடர் அபாய மேலாண்மை விவகாரங்களை வலுப்படுத்துதல்

முன்னுரிமை
– இந்த 4 பிரிவுகளுக்கும் வழங்கப்படும் முன்னுரிமைகள்:
- பொருளாதார மீட்சி அம்சத்தை வலுப்படுத்துதல்
- பொருளாதாரப் பலத்தை வளப்படுத்துதல்
- ஆக்கப்பூர்வமான புதுமையை அமல்படுத்துதல்
பொருளாதார ஆய்வு, நிதி நிலைப்பாடு
– அனைத்துலகப் பொருளாதார மீட்சியைப்
பயன்படுத்திக்கொள்ளுதல்
– புவிசார் அரசியலின் நிலையற்ற சுழலால் ஏற்படும் அபாயங்களைக் குறைத்தல்
– பொருள், உணவு விலையினால் ஏற்பட்டுள்ள பணவீக்க அழுத்தத்தைக் குறைத்தல்
– நிதி ஒருங்கிணைப்பின் வழி மேம்பாட்டு அம்சத்தை நிலைப்படுத்துதல்

– அடுத்தாண்டிற்கான வரவுசெலவுத்
திட்டத்தை நிதியமைச்சர் தெங்கு ஸஃருல் தெங்கு அப்துல் அஸிஸ் அக்டோபர் 7ஆம் தேதி மக்களவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய உள்ளார். கோவிட்-19 தொற்றுப் பரவல் தாக்கத்திற்குப் பிறகு தொடர்ந்து வலுப்பெற்று வரும் பொருளாதார மீட்சி அம்சத்தைக் கருத்தில்கொண்டு இந்த வரவுசெலவுத் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது.








