RM2,500 குறைவான வருவாய் ஈட்டும் ஐந்து குழந்தைள் இருக்கும் B40 குடும்பங்களுக்கு BKM வழி 2,500 ரிங்கிட்

அடுத்த ஆண்டு முதல், RM2,500 அல்லது அதற்கும் குறைவாக சம்பாதிக்கும் அல்லது ஐந்து குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் RM2,500 உதவி பெற தகுதியுடையவர்கள் ஆவர். இது 2023 பட்ஜெட்டில் அரசாங்கத்தால் வழங்கப்படும் மலேசிய குடும்பத் திட்டத்தின்  (BKM) கீழ் நேரடியாக பெறும்  பண உதவி இதுவாகும்.

நிதியமைச்சர், தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் அப்துல் அஜீஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​பல குழந்தைகளை ஆதரிக்கும் மக்களின் சுமையை குறைக்கும் அரசு முயற்சியாக இது ஒரு புதிய வகை என்று கூறினார்.

நான்கு குழந்தைகள் இருக்கும் குடும்பங்களுக்கு RM1,000 முதல் RM2,000 வரை கிடைக்கும். RM2,500 முதல் RM5,000 வரை சம்பாதிக்கும் குடும்பங்கள் குழந்தைகளின் எண்ணிக்கையைப் பொறுத்து RM500 முதல் RM1,250 வரை பெறத் தகுதியுடையவர்கள் என்று அவர் இன்று மக்களவையில் 2023ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சமர்ப்பித்த போது கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here