கோழிகளை ஏற்றிச் சென்ற லோரி தீப்பிடித்ததில் 4,000 கோழிகள் இறந்தன

ஜெலி, அக்டோபர் 8 :

இங்குள்ள ஜாலான் லெபுஹ்ராயா தைமூர் பாராட்டின் 10 ஆவது கிலோமீட்டரில் நேற்று கால்நடைகளை ஏற்றிச் சென்ற லோரி தீப்பிடித்ததில், சுமார் 4,000 உயிருள்ள கோழிகள் இறந்தன.

நள்ளிரவு 12 மணியளவில் நடந்த இந்த விபத்தில், லோரி மற்றும் கோழிகள் தீயில் எரிந்ததில் RM80,000 இழப்பு ஏற்பட்டதாக ஜெலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத் தலைவர், முகமட் அட்னி இப்ராஹிம் கூறினார்.

முதற்கட்ட விசாரணையில் உயிருள்ள கோழிகள் ஏற்றப்பட்ட லோரியை பேராக்கின் லுமூட்டில் இருந்து வரும் வழியில் தனது காதலியுடன் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் ஓட்டிச் சென்றது கண்டறியப்பட்டது.

அவர் கூறுகையில், சம்பவம் நடந்த இடத்திற்கு வந்தபோது, ​​திடீரென தீ விபத்து ஏற்படுவதற்கு முன் லோரியில் பிரேக்கில் கோளாறு இருந்ததாக நம்பப்படுகிறது.

“லோரியின் டிரைவரும் அவரது காதலியும் லொறியிலிருந்து குதித்து தங்களை காப்பாற்றிக் கொண்டனர். அதன் பின்னர் அவசரகால தொலைபேசியை அழைத்து தகவல் தெரிவித்தனர்.

“குறித்த கோழிகள் பாசீர் மாஸுக்கு விநியோகத்திற்காக அனுப்பப்பட்டதாக அறியப்படுகிறது ,” என்று அவர் கூறினார்.

முகமது அட்னி கூறுகையில், தகவல் கிடைக்கப்பெற்றதும் நள்ளிரவு 12.15 மணியளவில் 10 உறுப்பினர்கள் இரண்டு இயந்திரங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தன.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்களுக்கு 10 நிமிடங்கள் எடுத்ததாக அவர் கூறினார்.

“இந்தச் சம்பவத்தில் 200 கோழிகள் மட்டுமே காப்பாற்றப்பட்டன, மேலும் 4,000 கோழிகள் தீயில் எரிந்து இறந்தன. தீ விபத்துக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here