பாலிங்கில் வெள்ளம் ; 43 குடும்பங்கள் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சம்

பாலிங், அக்டோபர் 9 :

இன்று பாலிங்கில் ஏற்பட்ட வெள்ளத்தைத் தொடர்ந்து, பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதால், மொத்தம் 43 குடும்பங்கள் இங்குள்ள பத்து 42, ரக்கன் மூடா வளாகத்தின் திறக்கப்பட்டுள்ள தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர்.

பாலிங் மாவட்ட குடிமைத் தற்காப்புப் படை அதிகாரி லெப்டினன்ட் முகமட் ஃபைசோல் அப் அஜீஸ் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பில் இன்னும் சமூக நலத் துறை கணக்கெடுப்பில் ஈடுபட்டுள்ளது என்றார்.

மேலும் இதுவரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களில் மக்கள் அனைவரும் பிபிஎஸ்ஸில் இன்னும் பதிவு செய்யவில்லை என்றும் தற்போதும் மழை பெய்து வருவதால், இரவு நேரங்களில் கனமழை பெய்யும் என்ற அச்சம் நிலவுவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களை வெளியேற்ற தமது துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

நேற்றிரவு பெய்த கனமழையால், இன்று காலை 10 மணியளவில் குடியிருப்புவாசிகளின் வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதாகவும், சில குடியிருப்புகளில் இன்னும் தண்ணீர் தேங்கி இருப்பதாகவும் கேடில் ஆற்றின் நீரோட்டம் இன்னும் எச்சரிக்கை மட்டத்தில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

“இன்று மாலை 5 மணி நிலவரப்படி, ஒரு தற்காலிக நிவாரண மையம் மட்டுமே திறக்கப்பட்டுள்ளது. சில குடியிருப்பு பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கி உள்ளது மற்றும் வானிலை மேகமூட்டத்துடன் உள்ளது, எனவே நிலைமை பாதுகாப்பற்றது என்பதால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரண மையங்களில் தங்க அறிவுறுத்தப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here