புறாக்களுக்கு விஷம் வைத்த குற்றச்சாட்டில் இரண்டு இந்தோனேசியர்களுக்கு சிறை

ஷா ஆலாம், அக்டோபர் 13 :

புறாக் கூட்டத்திற்கு விஷம் வைத்த குற்றச்சாட்டில் இரண்டு இந்தோனேசிய ஆண்களுக்கு தலா 6 மாத சிறைத் தண்டனை விதித்து இங்குள்ள அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விலங்குகள் நலச் சட்டம் 2015ன் கீழ் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்ட ஃபாதர் ரோசி அர்சிஜோ, 22, மற்றும் அப்துல் ரஹ்மான் சௌஜி, 32, ஆகிய இருவருக்கும் இன்று வியாழக்கிழமை (அக். 13) சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் துப்புரவுத் தொழிலாளிகளான இருவருக்குமான சிறைத் தண்டனை, அவர்கள் கைது செய்யப்பட்ட ஜூலை 26-ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்த நீதிபதியால் உத்தரவிடப்பட்டது.

அவ்வழக்கில் குற்றச்சாட்டை மறுத்த நூர் ஹசிரா மசுவான், 32, மற்றும் நூருல் நஜ்வா ஷஃபிகா சுக்ரி, 22, ஆகிய இருவர் மீதான வழக்கு விசாரணையை எதிர்வரும் நவம்பர் 17 ஆம் தேதிக்கு நீதிமன்றம் நிர்ணயித்தது.

நிர்வாக உதவியாளர்களான இரண்டு பெண்களும் குற்றச்சாட்டை எதிர்த்து விசாரணை கோரினர்.

ஜூலை 21 ஆம் தேதி மாலை 3.53 மணியளவில் இங்குள்ள பத்து திகாவில் உள்ள ஒரு தொழிற்சாலையின் முன் புறாக்களுக்கு விஷம் வைத்ததாக அவர்கள் மீது கூட்டாக குற்றம் சாட்டப்பட்டது.

ஒத்து குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக RM100,000 அபராதம் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் சட்டத்தின் பிரிவு 31 (1) (a) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டது.

கால்நடை மருத்துவ சேவைத் துறையைச் சேர்ந்த முகமட் ஷெரீப் சப்ரான் இவ்வழைக்கைத் தொடுத்தார். அதே சமயம் நூர் இவானி இஸ்ஸாதி நூர் ஹசிரா மற்றும் நூருல் நஜ்வா ஷஃபிகாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

ஃபத்தர் மற்றும் அப்துல் ரஹ்மான் ஆகியோர் எந்த வக்கீலாலும் பிரதிநிதித்துவப்படுத்தப்படவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here