இங்கிலாந்தில் ரிஷி சுனக்கை பிரதமராக்க எம்.பி.க்கள் முயற்சி- லிஸ் டிரசுக்கு நெருக்கடி

லண்டன், அக்டோபர் 15 :

இங்கிலாந்தில் புதிய பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களில் கன்சர் வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள் மற்றும் உறுப்பினர்கள் இடையே ஓட்டுப்பதிவு நடத்தப் பட்டது.

இதில் லிஸ்டிரஸ் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் 43 சதவீத ஓட்டுகள் பெற்று தோல்வியை சந்தித்தார். இதையடுத்து லிஸ் டிரஸ் வரி குறைப்பு நடவடிக்கை எடுத்தார்.

23ந் தேதி நிதி அமைச்சர் குலாலி குவாரிடெப் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்தார். அதில் 4.15 லட்சம் கோடி வரி குறைப்பு செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது இங்கிலாந்தில் கடும் பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியது. வரிகுறைப்பு முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என ஆளும் கன்சர் வேட்டிவ் கட்சி எம்.பி.க்கள்கோரிக்கை விடுத்தனர்.

எதிர்ப்பு அதிகமானதால் நிதி அமைச்சர் குவாலி குவாரி டெப்பை பதவி நீக்கம் செய்து பிரதமர் லிஸ்டிரஸ் அதிரடி நடவடிக்கை எடுத்தார். இந்த நிலையில் லிஸ் டிரசை நீக்கி விட்டு ரிஷி சுனக்கை பிரதமராக்க கன்சர் வேட்டிவ் கட்சியை சேர்ந்த அதிருப்தி எம்.பிக்.கள் திட்டமிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

முந்தைய போரிஸ் ஜான்சன் ஆட்சியில் நிதி அமைச்சராக இருந்து நல்ல பெயர் வாங்கிய ரிஷி சுனக்கை பிரதமராக்கி விட்டு தேர்தலில் 3-வது இடத்தை பிடித்த பென்னி மார்டன்டை துணைப் பிரதமராக்க எம்.பி.க்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இங்கிலாந்தில் வரி குறைப்பு நடவடிக்கைகளால் கடும் பொருளாதார நெருக்கடி உருவாகி உள்ளதால் லிசி டிரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. யுகவ் என்ற ஆய்வு நிறுவனம் தற்போது எடுத்த கருத்துக்கணிப்பில் தவறான நபரை பிரதமராக தேர்ந்தெடுத்ததாக 62 சதவீத வாக்காளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். 15 சதவீதத்தினர் மட் டுமே லிஸ்டிரசை ஆதரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here