பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 17 :
லங்காவியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (அக்.16) ஏற்பட்ட வெள்ளம் குறித்து முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கவலை தெரிவித்துள்ளார்.
லங்காவியின் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினரான டாக்டர் மகாதீர் கூறுகையில், லங்காவி தீவுக்குச் செல்வோர், குடியிருப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
இன்று காலை நிலவரப்படி, 11 குடும்பங்களைச் சேர்ந்த 44 பேர் இன்னும் தற்காலிக வெள்ள நிவாரண மையங்களில் தங்கவைக்கப் பட்டுள்ளதாக அறியமுடிகிறது.








