இரு சுற்றுலா பேருந்துகள் மோதியதில், மூவர் படுகாயம் மற்றும் 12 பேருக்கு லேசான காயங்கள்…

கோத்தா கினாபாலு, அக்டோபர் 23 :

இங்குள்ள ஹார்பர் சிட்டிக்கு அருகிலுள்ள ஜாலான் பந்தாய் என்ற இடத்தில், நேற்று இரவு நடந்த சம்பவத்தில் சுற்றுலாப் பேருந்து மற்றொரு சுற்றுலாப் பேருந்தின் பின்புறத்தில் மோதியதில், 3 பேர் பலத்த காயமடைந்ததுடன் 12 பேர் லேசான காயமடைந்தனர், என்று சபா மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இரவு 7.08 மணிக்கு சம்பவம் தொடர்பாக தங்களுக்கு அழைப்பு வந்தது. உடனே அவசர சேவை உதவிப் பிரிவு (EMRS) மற்றும் ஒரு வேன் உட்பட மொத்தம் 10 உறுப்பினர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.

“இந்த விபத்தில் மொத்தம் 15 பேர் பாதிக்கப்பட்டனர், அவர்களில் மூவர் படுகாயமடைந்தனர், 12 பேர் லேசான காயமடைந்தனர், அவர்கள் அனைவரும் சுற்றுலாப் பேருந்தின் பின்புறத்தில் இருந்தவர்கள்,” என்று அவர் நேற்று வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

அவரது கூற்றுப்படி, ‘காயமடைந்தவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களைப் பயன்படுத்தி குயின் எலிசபெத் I மருத்துவமனைக்கு (HQE) அனுப்பப்பட்டனர்’ என்று அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here