அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் ஒளியைக் கொண்டு வரும் நன்னாளாக அமையட்டும்

மாமன்னர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா மற்றும் ராஜா பெர்மைசூரி அகோங் துங்கு ஹாஜா அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தரியா அனைத்து இந்துக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்து கொள்கின்றனர்.

திங்கட்கிழமை (அக் 24) இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்ட பதிவில், தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் அமைதியையும் செழிப்பையும் தரும் என்று அவர்களின் மாட்சிமைகள் நம்பிக்கை தெரிவித்துள்ளன.

தீபாவளி வாழ்த்துக்கள். இந்த பண்டிகை அனைத்து இந்துக்களுக்கும் அமைதி, செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமையின் ஒளியைக் கொண்டு வரட்டும் என்று அவர்களின் முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

பொதுவாக விளக்குகளின் திருவிழா என்று அழைக்கப்படும் தீபாவளி கொண்டாட்டம் தீமையின் மீது நன்மையின் வெற்றியைக் குறிக்கிறது. இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றியைக் குறிக்கிறது. இது இந்து மதத்தின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here