சாலை விபத்தில் 9 வயது சிறுமி சியாரா தக்‌ஷகன்யா டேவிட் மரணம்

இஸ்கந்தர் புத்ரி, நேற்றிரவு ஜாலான் இஸ்மாயில் சுல்தான், ஈஸ்ட் லாடாங், கேலாங் பாத்தாங் பகுதியில் இரண்டு கார்கள் சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் ஒன்பது வயது சிறுமி இறந்தார். மேலும் இருவர் படுகாயம் அடைந்தனர். நான்கு பேர் சிறியளவில் காயமடைந்தனர்.

Toyota Vios காரின் பின் இருக்கையில் இருந்த S K சியாரா தக்ஷகன்யா டேவிட் என அடையாளம் காணப்பட்ட சிறுமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக Iskandar Puteri தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய நடவடிக்கைகளின் தளபதி மூத்த தீயணைப்பு அதிகாரி II அஹ்மத் நஸ்ரான் ஓமர் தெரிவித்தார்.

காரில் மேலும் மூவருடன் பயணித்த சிறுமியின்  கார் ஓட்டுநர் ராஜேந்திரன் 45, என அடையாளம் காணப்பட்டார், அவர் பலத்த காயமடைந்தார். மற்ற இருவரான பி பெட்ரிசியா புவனேஸ்வரி 45, மற்றும் நான்கு வயது எஸ் கே கிளாரிசா மதுமிதா டேவிட் ஆகியோருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

படுகாயமடைந்த மற்றவர் டொயோட்டா அயன்சா காரின் ஓட்டுநர், கோ ரோங் ஹாவ் (22) என்று அவர் கூறினார். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக சுல்தானா அமினா மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு 8.44 மணிக்கு விபத்து குறித்து நிலையத்திற்கு ஒரு துயர அழைப்பு வந்தது என்று அஹ்மத் நஸ்ரான் கூறினார். இதற்கிடையில், இஸ்கந்தர் புத்ரி மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ரஹ்மத் ஆரிஃபின், பெர்னாமா தொடர்பு கொண்டபோது, ​​விபத்தை உறுதிப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here