விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருந்த அனைவரும் நலமாக உள்ளதாக தகவல்

மருத்துவ அதிகாரிகள் குழு உட்பட 6 பேரை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் இன்று மதியம் 1.15 மணியளவில், கேமரன் ஹைலேண்ட்ஸ் அருகே  ஈப்போ நோக்கிச் சென்ற ஹெலிகாப்டர் பிரிஞ்சாங் அருகே உள்ள வனப் பகுதியில் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டரில் இருந்த  அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக பகாங் காவல்துறைத் தலைவர் டத்தோஸ்ரீ ராம்லி முகமது யூசுப் பெர்னாமா தொடர்பு கொண்டபோது தெரிவித்தார்.

இப்போதைக்கு நமக்குக் கிடைத்ததெல்லாம் அவ்வளவுதான். அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர் என்று சுருக்கமாக கூறினார். விமானியைத் தவிர, தனியாருக்குச் சொந்தமான ஹெலிகாப்டரில் ஒரு மருத்துவர் மற்றும் நான்கு மருத்துவ அதிகாரிகள் இருந்ததாக நம்பப்படுகிறது.

இருப்பினும், பேராக் மற்றும் தீயணைப்பு மீட்புத் துறை செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில், அதில் இருந்தவர்களில் மூவர் பலத்த காயம் அடைந்ததாகவும், மேலும் மூவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாகவும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here