புதிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு வாழ்த்து தெரிவித்த மலேசிய பிரதமர்

புதிய பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்கிற்கு மலேசிய பிரதமர், டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தனது வாழ்த்தினை தெரிவித்துக் கொண்டார்.

மலேசியாவும் ஐக்கிய இராச்சியமும் ஒரு அணுக்கமான  உறவை  குறிப்பாக வர்த்தகம் மற்றும் முதலீட்டில் கொண்டிருக்கிறது. மேலும், இரு நாடுகளும் நெருங்கிய உறவுகள், வரலாறு மற்றும் இரு நாடுகளின் மக்களுக்கு பயனளிக்கும் அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்கின்றன.

எங்கள் இரு நாடுகளின் உறவுகளின் திறனை பெற உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற மலேசியா விரும்புகிறது. உங்களுடைய திறமையான வழிகாட்டுதலால், தற்போதுள்ள இந்த கூட்டாண்மை மேலும் வலுவடையும் என்று நான் நம்புகிறேன் என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here