1MDB ஊழலை மறைக்க உதவியதாகக் கூறப்படுவது தொடர்பில் முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலி விசாரிக்கப்பட வேண்டும் என்கிறார் டாக்டர் மகாதீர்

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 26 :

1MDB ஊழலை மறைக்க உதவியதாகக் கூறப்படும் முன்னாள் சட்டத்துறை தலைவர் டான்ஸ்ரீ அபாண்டி அலி விசாரிக்கப்பட வேண்டும் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

“இதுவரை அபாண்டிக்கு எதிராக எந்த விசாரணையோ அல்லது நடவடிக்கையயோ எடுக்கப்படாதது மிகவும் விசித்திரமாக இருக்கிறது என்று நேற்று (அக் 25) தனது டுவிட்டரில் பகிரப்பட்ட ஒரு வீடியோவில் கூறினார்.

“தோமி தாமஸ் எழுதிய புத்தகம் தொடர்பில் விசாரணை நடத்தும் அரசாங்கம், அதற்கு முன்னர் சட்டத்துறை தலைவராக டான்ஸ்ரீ அபாண்டி அலி இருந்தபோது நடந்த 1MDB ஊழலை மறைக்க உதவியதாக கூறப்பட்டதை ஏன் இதுவரை விசாரணை செய்யவில்லை என்பது தனக்கு விசித்திரமாக இருப்பதாக” அவர் கூறினார்.

“1MDB ஊழல் விஷயத்தில் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் தவறு செய்யவில்லை என்று கூறி, அவரை அது தொடர்பான அனைத்து சட்ட நடவடிக்கையிலிருந்தும் அபாண்டி விடுவித்தார். ஆனால் SRC இன்டநேஷனல் வழக்கில் நஜிப்பை குற்றவாளியாக அறிவித்து அவர் தற்போது சிறையில் இருக்கிறார், இதிலிருந்து 1MDB ஊழலை மூடிமறைப்பதில் அபாண்டி ஈடுபட்டிருப்பதை தெளிவாகக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.

தோமி தாமஸ் எழுதி வெளியிட்டுள்ள நூல் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவது தொடர்பில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. சட்டத்திற்கு முரணாக செயல்படுவதாக கூறப்படும் எவராயினும் சட்டத்திட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும், இதில் நானும் விதிவிலக்கல்ல என்று டாக்டர் மகாதீர் மேலும் தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here