குவா தெம்புருங்கில் வெள்ளத்தில் சிக்கிய 30 அனைத்துலக படக்குழு உறுப்பினர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்

ஈப்போ, அக்டோபர் 27 :

கோபெங்கில் உள்ள குவா தெம்புருங்கில் நேற்று திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய 30 அனைத்துலக திரைப்பட நிறுவனக் குழு உறுப்பினர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர்.

‘குவா தெம்புருங்கில் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் பொதுமக்கள் சிக்கித் தவிப்பது குறித்து கம்பார் காவல்துறை தலைமையகத்திற்கு நேற்று மாலை 4.10 மணிக்கு தகவல் கிடைத்தது என்று பேராக் காவல் துறைத் தலைவர் டத்தோ முகமட் யூஸ்ரி ஹாசன் பஸ்ரி தெரிவித்தார்.

“கோபெங் மற்றும் கோத்தா பாரு காவல் நிலையங்களில் இருந்து ஒரு குழு அந்த இடத்திற்கு அனுப்பப்பட்டது. முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், மாலை 4 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. குகையில் நீர்மட்டம் திடீரென உயர்ந்ததையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் சிக்கினர்.

“தண்ணீர் சுமார் 1.5 மீட்டர் உயரத்திற்கு உயர்ந்தது. அங்கு மாட்டிக்கொண்டவர்கள் சிங்கப்பூரில் இருந்து ஒரு திரைப்படத்தில் பணிபுரியும் ஒரு சர்வதேச திரைப்பட நிறுவனத்தில் பணிபுரியும் குழு உறுப்பினர்கள், ”என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

இந்த அசம்பாவிததத்தில் சிக்கிய படக்குழு உறுப்பினர்களில் ஒருவரான முஹமட் அய்டீல்பித்ரி இலியாஸ், 20, கூறுகையில், தான் குறித்த திரைப்பட நிறுவனத்தில் இரண்டு மாதங்களாக பணிபுரிந்து வருவதாகவும், அவர்கள் நேற்று காலை 8 மணிக்கு குகைக்குள் நுழைந்ததாகவும், மாலை 4 மணியளவில், நீர்மட்டம் அவர்களின் இடுப்பு மட்டத்திற்கு திடீரென உயர்ந்ததாகவும் கூறினார்.

“தாங்கள் இரண்டு மணி நேரம் சிக்கிக்கொண்டதால் அனைவரும் பீதியடைந்ததாகவும், குகைக்கு வெளியே உள்ள பணியாளர்களை தொடர்பு கொண்டு தங்கள் நிலைமையை அவர்களுக்குத் தெரிவிக்க, அவர்கள் உடனடியாக தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையை தொடர்பு கொண்டனர் என்றார்.

“இது நடந்தபோது நான் அதிர்ச்சியடைந்தேன் மற்றும் பயந்தேன், என்னையும் எங்கள் உபகரணங்களையும் காப்பாற்ற வேண்டும் என்று மட்டுமே நான் நினைத்தேன்,” என்று அவர் சம்பவ இடத்தில் சந்தித்தபோது செய்தியாளர்களிடம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here