அலோர் செத்தார், 15ஆவது பொதுத் தேர்தலை (GE15) எதிர்கொள்ள GTA மற்றும் Perikatan Nasional (PN) இணைந்து செயல்பட, டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் ‘துரோகத்தை’ மறக்கத் தயாராக இருப்பதாக கெராக்கன் தனா ஏர் (GTA) தலைவர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறினார்.
எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படுவதன் மூலம் மட்டுமே அம்னோவை தோற்கடிக்க முடியும் என்று டாக்டர் மகாதீர் கூறினார். அதனால் தான் இந்த விஷயத்தை முஹிடினிடம் முன்மொழிகிறேன் என்றார்.
ஆனால் PN தலைவரான முஹிடின் இந்த வேண்டுகோளை நிராகரித்தார். நான் நினைத்தேன், அவர் முன்பு முதுகில் குத்தியிருந்தாலும் பரவாயில்லை. நம் மக்கள், நாடு மற்றும் மதத்திற்காக, முஹிடின் எனக்கு துரோகம் செய்த பிறகும் நாங்கள் அவருக்கு ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறோம். நான் அதை மறக்க தயாராக உள்ளேன்.
ஆனால்… அவர் யாருடனும் ஒத்துழைக்க விரும்பவில்லை என்று கூறினார். எவ்வளவு திமிர் என்று நேற்றிரவு இங்கு GTA பேரணியில் பேசும் போது அவர் கூறினார்.
பார்ட்டி பெஜுவாங் தனா ஏர் (பெஜுவாங்) தலைவர், முஹிடின் எந்தக் கட்சியுடனும் ஒத்துழைக்காமல் GE15 ஐ வெல்ல முடியும் என்று நம்புவதாகவும், இன்னும் இரண்டாவது முறையாக பிரதமராக ஆவதில் ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார்.
GE15ல் அம்னோவை தோற்கடிக்க எந்தக் கட்சியுடனும் ஒத்துழைக்க GTA மறுத்ததில்லை என்றார் டாக்டர் மகாதீர். அம்னோவை தோற்கடிக்க எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதை மக்கள் விரும்புகிறார்கள் என்று எனக்குத் தெரியும். ஆனால் நாங்கள் அவர்களிடம் ஒத்துழைக்குமாறு கேட்டபோது, அவர்கள் மறுத்துவிட்டனர். நாங்கள் தயாராக இருக்கிறோம். ஜிடிஏவில் கூட எங்களிடம் நான்கு கட்சிகள் உள்ளன. நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம் ஆனால் அவர்கள் (ஒத்துழைக்க) விரும்பவில்லை என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், ஜிடிஏ துணைத் தலைவர் டத்தோஸ்ரீ முக்ரிஸ் துன் மகாதீர், கூட்டணி சுமார் 120 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவதை இலக்காகக் கொண்டுள்ளது என்றும் வேட்பாளர்கள் நவம்பர் 2 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறினார்.
GTA போட்டியிடும் உண்மையான இடங்களின் எண்ணிக்கை பின்னர் இறுதி செய்யப்படும் என்று கூறிய அவர், கெடாவில் பத்துக்கும் குறைவான நாடாளுமன்றத் தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்துவதாகவும் கூறினார்.