கோலாலம்பூர், அக். 30-

அரசாங்க – தனியார் ˜சேவைத் துறையிலும் தலைமைத்துவத்திலும் ஈடுபடுவதற்கு இளைய சமூகத்தினர் சுதந்திரத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட ஆசியாவின் சிறந்த தலைவர்களை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள˜வேண்டும் என்று பராமரிப்பு நிதி அமைச்ர் டத்தோஸ்ரீ தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் கருத்துரைத்தார்.

என்னைப் பொறுத்தவரையில் எனது ˜தோள் மீது பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு ˜கோவிட்-19 தொற்றுக்கு எதிரான ˜போராட்டத்தில் மலேசியர்களுக்காகப் ˜போராடியது மிகவும் மதிக்கத்தக்க நடவடிக்கையாகக் கருதுகின்றேன்.

நான் ஏற்கெனவே குறிப்பிட்டது˜போல் நீங்கள்தான் மலேசியாவின் எதிர்காலம். கடந்த சில ஆண்டுகள் மிகவும் கடுமையாகவும் சவால் மிக்கதாகவும் இருந்ததை என்னால் உணர முடிந்தது. ஆனால், அது காலம் நமக்கு வழங்கிய சவால்.

சவால்களின் மூலம் நாம் நம்பிக்கையையும் தன்முனைப்பையும் கற்றுக் கொள்ளலாம் என்று நேற்று தலைநகரில் நடைபெற்ற 2022 இளையோர் பொருளாதார கலந்துரையாடலில் உரையாற்றிய தெங்கு ஸஃப்ருல் குறிப்பிட்டார்.

நமது காலத்தில் ஆசியாவின் தலைசிறந்த தலைவர்களாக விளங்கிய இந்தியாவின் மகாத்மா காந்தி, ஜவஹர்லால் ˜நரு, இந்தோனேசியாவின் சுகார்னா, சிங்கப்பூரின் லீ குவான் இயூ, நம் நாட்டின் துங்கு அப்துல் ரஹ்மான், துன் அப்துல் ரசாக் ஆகியோரை நாம் மறந்துவிடக்கூடாது.

அவர்கள் அனைவரும் இளம் வயதிலேயே தங்கள் செயல்பாடுகளை மும்முரமாகத் தொடங்கினர். ஆனால், அது அரசியலாக இருக்க ˜வேண்டிய கட்டாயமில்லை. இருப்பினும், நாடு அழைத்தபோது அவர்கள் பதிலளித்தனர். நாட்டிற்குச் ˜சேவையாற்ற முன்வரத் தயாராக இருந்தனர்.

இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டிருக்கும் நீங்கள் அனைவரும் உங்கள் சமூகத்தின் தலைவிதியை ˜நேர்மறையாக மாற்றி அமைக்கக்கூடிய வல்லமையைக் கொண்டவர்கள் ஆவர்.

ஆனால், நீங்கள் அனைவரும் முன்வந்து நாட்டின் முன்னேற்றத்தில் பங்காற்ற ˜வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார். பொருளாதாரம் கடந்த ஆண்டு நான்காம் காலாண்டு முதல் முன்னேறி வருகிறது. இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் மட்டுமே 8.9 விழுக்காடு அடைந்துள்ளது. அதே போல் இவ்வாண்டு ஆகஸ்டு மாத தரவின்படி வேலையில்லாதோர் எண்ணிக்கை விகிதமும் 3.7 விழுக்காடாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக, கோவிட்-19 பெருந்தொற்று காலகட்டத்திற்கு முன்பு இருந்ததைப்˜போல் இந்த விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இது வேலை ˜தேடுபவர்களுக்கு ஒரு நற்செய்தியாகும். 2022 வரவு – செலவுத் திட்டத்தில் ˜வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரவும் திறன் ˜மேம்பாடு – திறன் புதுப்பித்தல் ˜போன்ற நடவடிக்கைகளுக்கும் 4.8 பில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கப்பட்டது.

அதேபோல் வாழ்வாதாரச் செலவுகள் அதிகரித்ததை எதிர்கொள்ள நல்ல நிலையிலான ஊதியத்தோடு ஆக்கப்பூர்வமான ˜வலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தித் தர நிதி அமைச்சு முனைப்புக் காட்டியுள்ளது.

ஏப்ரல் 2022 இல் அரசாங்கம் குறைந்தபட்ச சம்பள விகிதத்தை 1,500 ரிங்கிட்டாக உயர்த்தும் நடவடிக்கையை அரசங்கப் பதிவேட்டில் இடம் பெறச் செய்தது.
அதேபோல் 2023 வரவு- செலவுத் திட்டத்தில் நாட்டின் மக்கள் தொகையில் 28 விழுக்காட்டைப் பிரதிநிதிக்கும் இளைஞர்களுக்கு அரசாங்கம் பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்த முனைந்துள்ளது.

இளம் தொழில்முனைவோர்களுக்கு உதவும் வகையிலான கடனுதவித் திட்டங்களுக்கு 305 மில்லியன் ரிங்கிட் மானியம், தெக்குன் பெலியா திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோல் முழு ˜நேர மாணவர்களுக்கும் 18-20 வயதினருக்கான இ-பெமுலா திட்டமும் 400 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீட்டோடு தொடரப்படுகின்றன.

இது தவிர பிடிபிடிஎன் கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் 20 விழுக்காடு பிரத்தியேகக் கழிவு உள்ளிட்ட பல்வேறு இணை திட்டங்கள் 2023 வரவு – செலவுத் திட்டத்தில் இடம் பெற்றுள்ளன என்றார் அவர்.

இதற்கிடையே, வரும் 15ஆவது பொதுத் ˜தேர்தலில் முதன் முறையாக வாக்குகளைச் செலுத்தவுள்ள 18 வயதிலிருந்து 20 வயதிற்குட்பட்ட இளம் வாக்காளர்கள் நாட்டின் குடிமக்களாக தங்களின் ஜனநாயகக் கடமையை தவறாது ஆற்ற ˜வண்டும். வாக்களிப்பது குடிமக்களின் முக்கியப் பொறுப்புகளில் ஒன்று. வரும் காலத்தின் அரசாங்கக் கட்டமைப்பை உறுதி செய்வதில் உங்கள் வாக்களிப்பு முடிவுகளும் முக்கியப் பங்காற்றும்.

எனவே, ˜தேர்வு உங்கள் கைகளில்தான் உள்ளது. வரும் உங்களுக்கான பொதுத் ˜தேர்தலில் புத்திசாலித்தனமாக ˜தேர்வு செய்யுங்கள். காரணம், ஒவ்வொரு வாக்கும் விலை மதிப்பற்றது. அனைத்துலக வர்த்தக சமூகம், முதலீட்டாளர்களின் வருகையை ஈர்ப்பதற்கு நாட்டின் நிலைத்தன்மையை மீட்சி பெறச் செய்ய ˜வேண்டும் எனவும் தெங்கு ஸஃப்ர்ருல் ˜கேட்டுக்கொண்டார்.

இந்த கலந்துரையாடலில் பலதரப்பட்ட பிரிவுகளைச் ˜சேர்ந்த 400க்கும் உட்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here