15வது பொதுத் தேர்தல்: நாடு முழுவதும் உள்ள 54 நாடாளுமன்றத் தொகுதிகளில் அமனா போட்டியிடும்

கோலாலம்பூர், அக்டோபர் 30 :

நவம்பர் 19 அன்று நடைபெறவுள்ள நாட்டின் 15வது பொதுத் தேர்தலில் நாடு முழுவதும் உள்ள 54 நாடாளுமன்றத் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை பார்ட்டி அமானா நெகாரா நிறுத்துகிறது.

2018 இல் நடந்த 14வது பொதுத் தேர்தலின் போது அமானா போட்டியிட்ட 27 இடங்களுடன் ஒப்பிடும்போது, தற்போது அந்தத் தொகை 35 விழுக்காடு அதிகரித்துள்ளது.

அமனா கட்சியின் துணை தலைவர் டத்தோஸ்ரீ சலாவுடின் அயூப், பூலாய் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுவார் என்றும், கட்சி தலைவர் முகமட் சாபு, கோத்தா ராயா நாடாளுமன்றத் தொகுதியை தற்காப்பார் என்றும் அது தெரிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here