ஆண்டு இறுதிக்குள் 12 மில்லியன் தொலைபேசி வாடிக்கையாளர்கள் 5G சேவையைப் பெறுவார்கள் என்கிறார் தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர்

கோத்தா பாரு, நவம்பர் 1 :

நாட்டிலுள்ள மொத்தம் ஆறு தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களில் ஐந்து நிறுவனங்கள் 5G சேவையை பெற்றுக்கொள்ளுவதற்கு, Digital Nasional Bhd (DNB) நிறுவனத்துடன் செய்துகொண்ட 5G உடனடி அணுகல் ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டன என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.

Celcom Networks Sdn Bhd, Digi Telecommunications Sdn Bhd, U Mobile Sdn Bhd, YTL Communications மற்றும் Telekom Malaysia Bhd (TM) ஆகியவையே அந்த ஐந்து நிறுவனங்களாகும் என்று அவர் மேலும் கூறினார்.

“இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்த ஆண்டு இறுதிக்குள் 12 மில்லியன் தொலைபேசி வாடிக்கையாளர்கள் 5G அணுகலைப் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here