வீட்டில் திடீரென ஏற்பட்ட தீப்பரவலில் சிக்கி தமையன் மரணம், தம்பி காயம் ; ரவூப்பில் சம்பவம்

ரவூப்:

ங்கு அருகிலுள்ள ஃபெல்டா டெர்சாங் 1 இல் உள்ள அவர்களது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்ததில், தீயில் இருந்து தப்பிக்க முயன்ற தமையன் இறந்தார், அதேநேரத்தில் அவரது தம்பி கைகளில் தீக்காயங்களுடன் தப்பித்தார்.

அதிகாலை 1.35 மணியளவில் வீட்டில் தீ ஏற்பட்டதாகவும், உயிரிழந்தவர் 46 வயதான அப்துல் ஷுக்குர் அப்துல்லா சுஹைமின் என்று அடையாளம் காணப்பட்டார் என்றும் பகாங் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் டத்தோ டாக்டர் வான் முகமட் ஜைடி வான் இசா கூறினார்.

மேலும் பாதிக்கப்பட்டவரின் 39 வயது சகோதரர் காயங்களுடன் தப்பினார் என்றார்.

“இவ்விபத்தில் இரண்டு வீடுகள் சேதமடைந்தன, முதல் விடு தீயால் முற்றிலும் அழிக்கப்பட்டது, இரண்டாவது வீடு 20 விழுக்காடு மட்டுமே எரிந்தது என்றும், தீயில் இருந்து தப்பிக்க முயன்ற ஷுகோர் தனது வீட்டின் பின்புறத்தில் விழுந்ததாக நம்பப்படுகிறது, இருப்பினும் அங்குசென்ற தீயணைப்புக் குழுவின் மருத்துவக் குழு CPR சிகிச்சை அழித்தது, ஆனால் அது தோல்வியடைந்தது” என்று அவர் சொன்னார்.

“அவரது இளைய சகோதரர் கைகளில் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டார் மற்றும் தமது அவசர மருத்துவ மீட்பு சேவையில் (EMRS) அவர் சிகிச்சை பெற்றார்,” என்று கூறிய அவர், அதிகாலை 2.50 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here